| முத்தி இலம்பகம் |
1670 |
|
|
| 2955 |
தீங்கதிர்த் திங்கள் செந்தீச் | |
| |
சொரிந்ததாற் றிசைக ளெல்லாந் | |
| |
தாங்குமா றென்னை யாவி | |
| |
தரிக்கிலேந் தேவிர் காளோ. | |
| |
|
|
(இ - ள்.) தேவிர்காள் - தேவர்களே!; வீங்கு பாற்கடலும் நஞ்சாய் விளைந்தது - (அரசன் தன்மை இங்ஙனம் மாறியதால்) பெரிய பாற்கடலும் நஞ்சாய் விளைந்தது; விரிந்த வெய்யோன் பாங்கு இலா இருளை ஈன்று பார் மறைத்திட்டது - விரிந்த ஞாயிறு தன்னிடத்தில் இல்லாத இருளை ஈன்றதனால், அவ்விருள் உலகை மறைத்துவிட்டது; தீ கதிர்த் திங்கள் திசைகள் எல்லாம் செந்தீச் சொரிந்தது - இனிய நிலவையுடைய திங்கள் திக்கெட்டும் வெந்தீயைப் பெய்தது; ஆவி தரிக்கிலேம் - (ஆகையால்) யாம் எம் உயிரைத் தாங்கற்கிலோம்; தாங்கும் ஆறு என்னை - அதனைச் சுமக்கும் வழி யாது?)
|
|
(வி - ம்.) ஈன்று - ஈன : எச்சத்திரிபு.
|
|
பாற்கடலும் என்புழி உன்மை உயர்வு சிறப்பு. தனக்கியல்பாகிய அமிழ்தம் விளையாமல் தன் தன்மை திரிந்து நஞ்சாய் விளைந்தது என்றவாறு. ஏனையவற்றிற்கும் இங்ஙனமே கூறிக் கொள்க. வெய்யோன் - ஞாயிறு. தீங்கதிர் - இனிய கதிர். தேவிர்காள் : விளி. அலும் ஓவும் அசைகள்.
|
( 357 ) |
வேறு
|
| 2956 |
விண்ணோர் மடமகள்கொல் விஞ்சைமக ளேகொல் | |
| |
கண்ணார் கழிவனப்பிற் காந்தருவ தத்தையென் | |
| |
றெண்ணாய வாணெடுங்கண் மெய்கொள்ள வேமுற்றுப் | |
| |
பண்ணாற்பயின்றீ ரினியென் பயில்வீரே. | |
| |
|
|
(இ - ள்.) எண் ஆய வாள் நெடுங்கண் மெய்கொள்ள ஏம் உற்று - உலகம் எண்ணும் தன்மையுடைய வாளனைய நீண்ட கண்கள் அறிவைக் கவர்ந்து கொண்டதனாலே மயக்கம் உற்று; கண்ஆர் கழிவனப்பின் காந்தருவ தத்தை - கண்ணுக்கு நிறைந்த பெருவனப்பினளான காந்தருவ மகளாகிய தத்தையை; விண்ணோர் மடமகள் கொல்?- வானவரின் இளமகளோ?; விஞ்சைமகளே கொல்? - வித்தியாதர மகளோ?; என்று பண்ணால் பயின்றீர் - என்று (பாராட்டி) யாழார்ல் வென்று உறவுகொண்ட நீர்; இனி என் பயில்வீர் - இங்ஙனம் கைவிட்ட நிலையில் என்ன உறவு கொண்டீராவீர்?
|
|
(வி - ம்.) அரசியர் அரசனை நோக்கி ஒருவரை யொருவர் காட்டிக் கூறுமாறு இச்செய்யுளிலிருந்து கூறுகிறார். இச் செய்யுளிற் காந்தருவ தத்தையைப் பிரிந்த ஆற்றாமை கூறப்பட்டது.
|