| முத்தி இலம்பகம் |
1674 |
|
|
| 2963 |
புல்லா ருயிர்செகுத்த பொன்னந் திணிதோளாய் | |
| |
மல்லா ரகன்மார்ப மட்டேந்தி வாய்மடுத்திட் | |
| |
டெல்லாருங் காண விலக்கணையோ டாடினா | |
| |
யல்லாந் தவணடுங்க வன்பி னகல்வாயோ. | |
| |
|
|
(இ - ள்.) புல்லார் உயிர் செகுத்த பொன்அம் திணிதோளாய் - பகைவருயிரைக் கொன்ற, பொன்னணி புனைந்த அழகிய திண்ணிய தோளனே!; மல் ஆர் அகல் மார்ப! - மல்லுத்தன்மை பொருந்திய அகன்ற மார்பனே!; மட்டு ஏந்தி - மதுவைப் பணிமகளிர் எடுத்து நிற்க; வாய்மடுத்திட்டு - வாயாற் பருகி; இலக்கணையோடு ஆடினாய் - இலக்கணையுடன் மகிழ்ந்தாய்; அவள் நடுங்க அன்பின் அகல்வாயோ? - (இன்று) அவள் அஞ்சுற நீ அவளைவிட்டு நீங்குவவையோ?
|
|
(வி - ம்.) ஏந்தி - ஏந்த : எச்சத்திரிபு.
|
|
புல்லார் - பகைவர். மல் - மற்றொழில். மட்டு - கள். ஏந்தி - ஏந்த. அல்லாந்து - அலமந்து. அவள் : அவ்விலக்கணை. அன்பின் - அன்பினின்றும்.
|
( 365 ) |
24.கோயில் விலாவணை
|
| 2964 |
கல்லோ மரனு மிரங்கக் கலுழ்ந்துருகி | |
| |
யெல்லாத் திசைதோறு மீண்டி யினமயிர்போற் | |
| |
சொல்லாத் துயர்வார் தொழுவா ரழுவாரா | |
| |
யல்லாந் தகன்கோயி லாழ்கடல்போ லாயிற்றே. | |
| |
|
|
(இ - ள்.) எல்லாத் திசைதோறும் ஈண்டு - (அரண்மனையின்) எல்ர்ர்ப் பக்கதினும் இருந்து (மகளிர்) கூடி; இனமயில்போல் - திரளாகிய மயிலைப்போல; கல்லோ மரனும் இரங்க - கல்லும் மரமும் வருந்த; கலுழ்ந்து உருகி சொல்லாத்துயர்வார் தொழுவார் அழுவாராய் - (தம் ஆற்றாமையைக்) கதறி உருகிச் சொல்லித் துயருற்றுத் தொழுவாரும் அழவாருமாய்; அல்லாந்து - அலமருதலாலே; அகன் கோயில் ஆழ்கடல்போல் ஆயிற்றே - அகன்ற அரண்மனை ஆழமாகிய கடல்போல வாயிற்று.
|
|
(வி - ம்.) கல்லோ : ஓ : அசை. இச் செய்யுள் முதலாக மூன்று செய்யுட்களும் அரண்மனையிலுள்ள அரசியரை ஒழிந்த (சீவகனுடைய) காம நுகர்ச்சி மகளிர் துயர் கூறுகின்றார். நச்சினார்க்கினியர் இச் செய்யுளில் உள்ள 'சொல்லா' என்பதனுடன் 'இங்ஙனம்' என வருவித்து 'இங்ஙனஞ் சொல்லி' எனப் பொருள்செய்து அரசியரின் விலாவணையைக் குறிப்பிட்டவராய், அடுத்த செய்யுட்களில் உள்ள பொருள்களையும் அவர்கட்கே ஆக்கிப், பின்னர் இச் செய்யுட் பொருளை அரண்மனை
|