| முத்தி இலம்பகம் | 
1681  | 
 | 
  | 
| 
 வாய் முழவம் விம்ம - யாழிசைக்கவும் முழவம் முழங்கவும்; ஆட்டு ஒழிந்து தீ தேன் ஊழிவாய்க் கொண்டது ஒக்கும் - பாடலும் ஆட்டமும் ஒழிந்து, இனிய தேனினம் முரல்வது மாறி முறையாகப் பாடினாற்போன்ற பாடலும் ஒழிந்தது. 
 | 
| 
    (வி - ம்.) முழவம் விம்ம ஆடலும், யாழிசைக்கப் பாடலும் என மாற்றிக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். யாழிசையும் பாட்டும் கூத்துக்கும் பொருந்துமாதலின் வேறு பிரிப்பதாற் பயனின்றென்க. ஊழ் ஊழியெனத் திரிந்தது. 
 | 
( 376 ) | 
|  2975 | 
அருங்கல நிறைந்த வம்பூம் |   |  
|   | 
  பவளக்கா றிகழம் பைம்பொற் |   |  
|   | 
பெருங்கிடு கென்னுங் கோலப் |   |  
|   | 
  பேரிமை பொருந்தி மெல்ல |   |  
|   | 
வொருங்குட னகர மெல்லா |   |  
|   | 
  முரங்குவ தொத்த தொல்லென் |   |  
|   | 
கருட்கடல் கல்லென் சும்மை |   |  
|   | 
  கரந்தது மொத்த தன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அருங்கலம் நிறைந்த அம் பூம் பவழக் கால் திகழும் - அரிய கலங்கள் நிறைந்த, அழகிய பூவேலை செய்த பவழக் காலிலே திகழ்கின்ற; பைம்பொன் பெருங்கிடுகு என்னும் கோலப் பேரிமை பொருந்தி - பைம் பொன்னாலான பெரிய சட்டம் என்னும் பெரிய இமை பொருந்தி; நகரம் எல்லாம் ஒருங்கு உடன் உறங்குவது ஒத்தது - நகரம் முழுதும் ஒன்றாக உறங்குவதைப் போன்றது; ஒல்லென் கருங்கடல் சும்மை கரந்ததும் ஒத்தது - ஒலிக்குங் கரிய கடல் தன் ஒலியை மறைத்ததும் போன்றது. 
 | 
| 
    (வி - ம்.) கலங்கள் நிறைந்து, பவழக்காலிலே பொன்சட்டத்தினால் மூடப்படுவது அங்காடித்தெரு. நகருக்கு அங்காடி கண்ணாகவும் சட்டம் அத்தெருவின் இமையாகவும் உருவகஞ் செய்யப்பட்டன. இதனால் அங்காடி யடைத்தது என்றார். 
 | 
( 377 ) | 
|  2976 | 
கலையுலாய் நிமிர்ந்த வல்குற் |   |  
|   | 
  கடல்விளை யமுத மன்னார் |   |  
|   | 
முலையுலாய் நிமிர்ந்த மொய்தார் |   |  
|   | 
  முழவுமுத் துரிஞ்சி மின்னச் |   |  
|   | 
சிலையுலாய் நிமிர்ந்த மார்பன் |   |  
|   | 
  றிருநகர் தெருள்க லாதாய் |   |  
|   | 
நிலையிலா வுலகின் றன்மை |   |  
|   | 
  நீர்மைமீக் கூறிற் றன்றே. |   | 
 
 
 |