பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1683 

போல; நல்ல வளை போழ் அரவம் - அழகிய சங்கினை அறுக்கும் ஒலியும்; நாரை நரல் குரல் போல் - நாரைகள் ஒலிக்கும் ஒலிபோல; கல்லா இளையர் கலங்காச் சிரிப்பொலியும் - கல்லாத சிறுவர்கள் விடாது நகைக்கும் ஒலியும்; கொல்யானைச் சங்கு ஒலியும் - கொல்லும் யானையின் பிளிறலும் சங்கின் முழக்கும்; கூடாது ஒழிந்தன - அங்கங்கே எழாமல் நீங்கின.

   (வி - ம்.) புரவி புலம்பு விடுகுரல், சங்கறுக்கும் போதுண்டாகும் ஒலிக்குவமை. புலம்பு - சோம்பல். வளை - சங்கு. போழரவம் : வினைத்தொகை கல்லா இளையர் சிரிப்புக்கு நாரையின் குரல் உவமை. கொல்யானை : வினைக்தொகை. யானை சங்கு என்னும் இவற்றின் ஒலியும் என்க.

( 380 )
2979 பொற்புடை பூமாலை சாந்தம் புனைகலன்கள்
கற்புடைய மங்கையரிற் காவ லவையிழந்த
நற்புடைய தேனார் நறவு நயம்புல்லார்
சொற்பொருள்போல் வேட்கப் படாசோர்ந் தொழிந்தனவே.>/span>

   (இ - ள்.) பொற்புஉடைய பூமாலை சாந்தம் புனைகலன்கள் - அழகிய மலர்மாலையும் சாந்தமும் புனைகலன்களும்; நற்பு உடைய தேன் ஆர் ்நறவும் அவை - நன்மையுடைய வண்டுகள் நுகரும் தேனு மாகிய அப்பொருள்கள்; கற்பு உடைய மங்கையரின் காவல் இழந்த - கற்புடைய பெண்டிர்போல காவலையிழந்தனவாய்; நயம் புல்லார் சொல் பொருள்போல் - இனிமையில்லாதவரின் சொற்பொருள்போல்; சோர்ந்து வேட்கப்படா ஒழிந்தன - சோர்வுற்று விரும்பப்படாவாய் ஒழிந்தன.

   (வி - ம்.) பொற்பு - அழகு. நற்பு - நன்மை. நயம் - ஈண்டுச் சொல்நயம். சீவகன் துறவால் வருந்தும் மாந்தர் இவற்றை விரும்பாமையால் சோர்ந்தன என்பதாம்.

( 381 )
2980 தீம்பால் கிளிமறந்து தேவ ரவிமடங்கித்
தூம்பார் நெடுங்கைம்மாத் தீங்கரும்பு துற்றாவா
யாம்பா லுரைமடங்கி யாரும் பிறர்பிறராய்க்
காம்பார் நடுவிருட்கட் காடேபோ லாயிற்றே.

   (இ - ள்.) கிளி தீம்பால் மறந்து - கிளி இனிய பாலை மறத்தலானும்; தேவர் அவி மடங்கி - வானவர்க்கு நல்கும் பலி மடங்குதலானும்; தூம்பு ஆர் நெடுங் கைம்மா தீ கரும்பு துற்றாவாய் - புழையுடைய நீண்ட கையுடைய யானை இனிய கரும்பைத் தின்னாமல் நிற்றலானும்; ஆம்பால் உரை மடங்கி யாரும் பிறர் பிறராய் - வேட்கையால் ஆகிய பலதிறப்பட்ட சொற்கள் மனத்திலே மடங்கி, எல்லோரும் சுற்றத் தொடர்ச்சியற்று நிற்றலா