|
(இ - ள்.) கொல் உலைப் பொங்கு அழல் கிடந்த - கொல்லன் உலையிலே பொங்கியெழும் நெருப்பிலே கிடந்த; கூர் இலை மல்லல் வேல் இரண்டு ஒரு மதியுள் வைத்தபோல் - கூரிய இலைவடிவுடைய வளவிய வேல்கள் இரண்டினை ஒரு திங்களிடத்தே வைத்தனபோல; செல்ல நீண்டு அகன்று அகம் சிவந்த கண்ணினார் - மிகுதியும் நீண்டு அகன்று உள்ளே சிவந்த கண்ணினராய்; அல்லல் உற்று அழுபவர்க்கு அரசன் சொல்லினான் - துன்புற்றழும் மங்கையர்க்குச் சீவகன் கூறினான்.
|