பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1686 

இச் செய்யுளோடு,

”பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
வையமும் தவமுந் தூக்கின் தவத்துக்(கு)
ஐயவி யனைத்தும் ஆற்றா தாகலின்
கைவிட் டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅ தோரிவள் விடப்பட் டோரே”

   எனவரும் புறநானூற்றுச் செய்யுளை (358) ஒப்புநோக்குக.

( 385 )
2984 உப்பிலிப் புழுக்கல் காட்டுட்
  புலைமக னுகுப்ப வேகக்
கைப்பலி யுண்டி யானும்
  வெள்ளின்மேற் கவிழ நீரு
மைப்பொலி கண்ணி னீரான்
  மனையக மெழுகி வாழ
விப்பொருள் வேண்டு கின்றீ
  ரிதனைநீர் கேண்மி னென்றான்.

   (இ - ள்.) காட்டுள் உப்பு இலி புழுக்கல் புலைமகன் உகுப்ப - சுடுகாட்டிலே உப்பு இல்லாத சோற்றைப் புலைமகன் நீருடன் சொரிய; யானும் ஏகக் கைப்பலி உண்டு வெள்ளில்மேல் கவிழ - யானும் அவன் ஒற்றைக் கையால் இட்ட அப் பலியை உண்டு பாடையின்மேற் கவிழ; நீரும் மைப்பொலி கண்ணின் நீரால் மனையகம் மெழுகி வாழ - நீவிரும் மைவிளங்கும் கண்ணீரினால் வீட்டை மெழுகி வாழ; இப்பொருள் வேண்டுகின்றீர் - இப் பயனில்லாத பொருளை விரும்புகின்றீர்; நீர் இதனைக் கேண்மின் என்றான் - (அதனை விட்டு) நீவிர் இப் பயனுறு பொருளைக் கேண்மின் என்றான்.

   (வி - ம்.) இக் காலத்திற் 'புலைமகன்' என்பான் 'வெட்டியான்' எனப்படுகின்றான். ”புலைமகன் என்றார் புரோகிதனை; அவன் தன் குலத்திற்குரியன செய்யாது, அரசன் குலத்திற்குரிய தொழில்களை மேற்கொண்டு நிற்றலின்; 'புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு' (புறநா. 360) என்றும், 'இழிபிறப்பினோன் ஈயப்பெற்று' (புறநா. 363)என்றும் பிறருங் கூறினார்; நாவிதனுமாம்” என்பர் நச்சினார்க்கினியர். கவிழ்தல் - முற்றுங்கெடுதல். (இறத்தல்)

( 386 )
2985 கொல்சின யானை பார்க்குங்
  கூருகிர்த் தறுக ணாளி
யில்லெலி பார்த்து நோக்கி
  யிறப்பின்கீ ழிருந்த லுண்டே
பல்வினை வெள்ள நீந்திப்
  பகாவின்பம் பருகி னல்லா
னல்வினை விளையு ளென்னு
  நஞ்சினுட் குளித்த லுண்டே.