பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1689 

   (இ - ள்.) காமம் சாய்த்து அடர்த்து வென்ற காஞ்சனக் குன்றம் அன்னான் - காமத்தைத் தள்ளி நெருக்கி வென்ற மேருவைப் போன்றவன்; தூமம் சால் கோதையீரே; - நறும்புகை கமழுங் கூந்தலையுடையீரே!; நாமம் சால் கதியின் நீங்கி - அச்சந்தரும் நாற்கதியிலிருந்து விடுபட்டு; தொல்வினை நீத்தம் நீந்தி - பழைமையான இருவினைக் கடலை நீந்தி; நன்பொன்மேல் உலகின் உச்சி - நல்ல பொன்மயமான மேலுலகுக்கும் மேலே; ஏமம் சால் இன்பம் வேண்டின் - காவல் நிறைந்த வீட்டின்பத்தை விரும்பின்; என்னொடும் வம்மின் என்றான் - (இன்று) என்னுடன் (துறவு பூண) வாருங்கோள் என்றான்.

   (வி - ம்.) 'காமஞ் சாய்த்தடர்த்து வென்ற ஏமஞ்சால் இன்பம்' எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

( 390 )
2989 நாடக நயந்து காண்பார் நலங்கிளர் கண்கள் சூன்று
மாடகக் கலத்து ளான்பா லமிர்தினை நயந்துண் பாரை
நீடகம் வெகுண்டுங் கையாற் பிடித்துநீ றட்டி யிட்டேங்
கோடக மணிந்த கோல முடியினாய் துறத்து மென்றார்.

   (இ - ள்.) நாடகம் நயந்து காண்பார் நலம்கிளர் கண்கள் சூன்றும் - நாடகத்தை விரும்பிக் காண்கின்றவரின் நன்மைக்குரிய கண்களைத் தோண்டினோம்; ஆடகக் கலத்துள் ஆன்பால் அமிர்தினை நயந்து உண்பாரை - பொற்கலத்திலே பசுவின்பாலை விரும்பி உண்பவரை; அகம் நீடு வெகுண்டும் கையால் பிடித்தும் நீறு அட்டியிட்டேம் - உள்ளத்திலே மிகுதியாகச் சினந்தோம், கையினால் (உண்ணாமற்) பிடிற்தோம், புழுதியை அள்ளியிட்டோம்; கோடகம் அணிந்த கோல முடியினாய்! - முடியணிந்த அழகிய முடியுடையாய்!; துறத்தும் என்றார் - துறப்போம் என்றனர்.

   (வி - ம்.) கோடகம் : தாமம், முகுடம், பதுமம், கோடகம், கிம்புரி என்னும் ஐவகையிற் சிகரமாய்ச் செய்த முடி.

   காண்பார் என்பது கட்பொறியை, உண்பார் என்றது வாய்ப்பொறியை, ஐம்பொறிகளை அடக்கினோம் இனி யாங்கள் துறத்தற்குரியோம் என்று தேவியர் கூறினர் என்பது கருத்து. இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் வருமாறு:

   நாடகம் எனவே பாட்டுங் கூறிற்று; 'விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும்' (திரி.11) என்றலின். உண்பாரை நீறட்டியும் என்றது, உண்பாரை உண்ணாமல் தடுத்தும் என்றவாறு. நீடகம் வெகுண்டும் - மிக்க அன்பினாற் புணர்கின்றாரை நெடுங்காலம் நெஞ்சாலே வெகுண்டும். கையாற் பிடித்தும் - நறிய நாற்றங்களை நுகர்கின்றாரை நுகராமற் கையாற் பிடித்தும் இட்டேம் என்றது, யாங்கள் பிறந்ததொரு பிறப்பிலே பிறரை இங்ஙனம் ஐம்பொறியால் நுகராமல் தடுத்து யாமும்.