பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1704 

பாடாது - நின் பண்பை எப்போதும் பாடாதவரை உலகம் பாடாது; நின் அடிப்பூச் சூடாதார் தாள் பண்ணவர் மாலைச் சுடர்மணி நெடுமுடி சூடார் - நின் அடிமலரைத் தரியாதார் அடியை வானவர்தம் மாலையணிந்த ஒளியுறும் மணியிழைத்த நெடுமுடியின்கட் சூடார்.

   (வி - ம்.) வாமன் குணம் நாளும் பாடுவாரை உலகம் பாடும் வாமன் அடிமலர் சூடியவர் அடியை விண்ணவர் தம்முடிமிசைச் சூடுவர் என்றானும் ஆயிற்று. சேடு - பெருமை. தொத்து - கொத்து. வாம : விளி. உலகம் புகழ்ந்து பாடாது என்க.

( 420 )

வேறு

3019 வைய மூன்று முடனேத்த
  வளருந் திங்கள் வாளெயிற்
றைய வரிமான் மணியணைமே
  லமாந்தோய் நின்னை யமராதார்
வெய்ய வெந்நோய் வினையுதைப்ப
  வீழ்ந்து துன்பக் கடலழுந்தி
நெய்யு நுண்ணூ னாழிகையி
  னிரம்பா நின்று சுழல்வரே.

   (இ - ள்.) வையம் மூன்றும் உடன் ஏத்த - உலகம் மூன்றும் ஒருங்கே போற்ற; வளரும் திங்கள் வாள் எயிற்று ஐய அரிமான் மணி அணைமேல் அமர்ந்தோய் - பிறை மதிபோலும் கூரிய பற்களையுடைய அழகிய சிங்கஞ் சுமந்த மாணிக்க அணையின்மேல் அமர்ந்தவனே!; நின்னை அமராதார் - நின்னை உளத்தாற் பொருந்தாதவர்; வெய்ய வெந்தோய் வினை உதைப்ப - சாலவுங் கொடிய நோயைத் தரும் தீவினை தள்ள; துன்பக் கடல் வீழ்ந்து அழுந்தி - துன்பக் கடலிலே வீழ்ந்து அழுந்தி; நிரம்பா நின்று - நோய் நிறைய நின்று; நெய்யும் நுண்நூல் நாழிகையின் சுழல்வர் - நெய்தற் றொழிலைடய தார்கிடக்கும் நாடாப்போல மறுகுவார்.

   (வி - ம்.) ஐ : உரிச்சொல்; ஈறு திரிந்தது.

   திங்கள் அணையிற் சிங்கத்தின் பல்லுக்குவமை ஆதலின் ஈண்டுப் பிறைத்திங்கள் என்க. அரிமான் - சிங்கம். அமராதார் - பொருந்தாதவர். நெய்யும் நுண்ணூல் நாழிகை என்பது நெய்தற்றொழிலுக்குரிய ஒரு கருவி. 'தார்கிடக்கும் நாடா' என்பர் நச்சினார்க்கினியர். பாவின் கண் நூல் நுழைக்கும் குழலுமாம். இறைவனை இறைஞ்சும் எண்ணமிலாதார் நண்ணவும் நாடவும் ஒண்ணாப் பொருநோயுற்றுழல்வார்.

( 421 )