முத்தி இலம்பகம் |
1710 |
|
|
3030 |
திருந்திய கீழ்த்திசை நோக்கிச் செவ்வனே | |
|
யிருந்ததோ ரிடிகுரற் சிங்கம் பொங்கிமேற் | |
|
சுரிந்ததன் னுளைமயிர் துறப்ப தொத்தன | |
|
னெரிந்தெழு மிளஞ்சுட ரிலங்கு மார்பினான். | |
|
|
(இ - ள்.) எரிந்து எழும் இளஞ்சுடர் இலங்கும் மார்பினான் - ஒளி மிகுந்து தோன்றுதற்குக் காரணமான இளஞாயிறு போல விளங்கும் மார்பினான்; திருந்திய கீழ்த்திசை நோக்கி - விளங்கிய கீழ்த்திசையை நோக்கி; செவ்வனே இருந்தது ஓர் இடிகுரல் சிங்கம் - நேரே யிருந்ததாகிய ஓர் இடி போன்ற குரலையுடைய சிங்கம்; மேல் சுரிந்த தன் உளைமயிர் துறப்பது ஒத்தனன் - மேல்நோக்கிச் சுரிந்த தன் பிடரிமயிரைத் துறப்பது போலத் (தன் முடிமயிரை நீக்க அமர்ந்து) தோன்றினான்.
|
(வி - ம்.) ‘மேல் பொங்கி இருந்தது ஓர் இடிகுரற் சிங்கம்‘ என்று கூட்டுவர் நச்சினார்க்கினியர்.
|
மயிரினை நீக்குங்கால் கீழ்த்திசை நோக்கி இருந்து நீக்குதல் மரபு. இதனை, “முன்னுபு கீழ்த்திசை“ எனவரும் செய்யுளினும் (2636) கண்டாம். இடிகுரல் : வினைத்தொகை. சுரிந்த - சுருண்ட.
|
( 432 ) |
3031 |
அஞ்சுடர்த் தாமரைக் கையி னான்மணிக் | |
|
குஞ்சிவெண் படலிகைக் குமர னீப்பது | |
|
செஞ்சுடர்க் கருங்கதிர்க் கற்றை தேறுநீர் | |
|
மஞ்சுடை மதியினுட் சொரிவ தொத்ததே. | |
|
|
(இ - ள்.) அம் சுடர்த் தாமரைக் கையினான் - அழகிய ஒளியுறும் தாமரை மலர்போலும் கையினால்; மணிக்குஞ்சி வெண்படலிகை - நீலமணிபோலும் சிகையை (வாங்கி) வெள்ளித்தட்டிலே; குமரன் நீப்பது - சீவகன் இடுகின்ற தன்மை; செஞ்சுடர்க் கருங்கதிர்க் கற்றை - செஞ்ஞாயிற்றினிடத்தே உள்ள கரிய கதிர்த்தொகுதியை; தேறும்நீர் மஞ்சுடை மதியினுள் சொரிவது ஒத்தது - தெளிந்த தன்மையையுடைய, முகிலிடையிலுள்ள, திங்களினிடத்தே இடுவது போன்றது.
|
(வி - ம்.) மணிக்குஞ்சி - நீலமணிபோலும் தலைமயிர். வெண்படலிகை - வெள்ளித் தட்டு. கருங்கதிர் : இல்பொருளளுவமை. தேறு நீர்-தெளிந்த நீர்மை. மஞ்சு - முகில், மதி - வெள்ளித்தட்டிற்குவமை.
|
( 433 ) |
3032 |
வேலைவாய் மணியிலை யூழ்த்து வீழ்ப்பதோர் | |
|
காலைவாய் கற்பக மரத்திற் காவலன் | |
|
மாலைவா யகிறவழ் குஞ்சி மாற்றலிற் | |
|
சோலைவாய்ச் சுரும்பினந் தொழுது சொன்னவே. | |
|
|