பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1716 

புதரிலே; காமர் புயல் இனம் மொக்குள் வன்கண் குறுமுயல் புலம்பி - விருப்பூட்டும் நீரின் இனமான மொக்குள்போலும் பெருங்கண்களையுடைய சிறுமுயல்கள் வெருவி; குன்றத்து அயல் வளர்கின்ற ஆமான் குழவியோடு இரிந்து - குன்றின் அயலிலே வளர்கின்ற ஆமான் கன்றுடன் ஓடி ; வயல்வளர் செந்நெல் கரும்பில் பாயும் - வயலில் வளரும் செந்நெல்லிலும் கரும்பிலும் பாய்கின்ற; மகத நாடு என்பது உண்டு - மகத நாடென ஒன்று உளது.

   (வி - ம்.) பொதும்பு - குறுங்காடு, புயல் - நீர்; ஆகுபெயர், இரிந்து - இரிய. முல்லையும் மருதமும் மயங்கின.

( 444 )
3043 இரும்பிடி தழீஇய யானை
  யிழிமதங் கலந்து சேறாய்ச்
சுரும்பொடு மணிவண் டார்க்குந்
  துகிற்கொடி மாட வீதிப்
பெருங்கடி நகரம் பேசி
  னிராசமா கிருக மென்ப
ரருங்கடி யமரர் கோமா
  னணிநக ராய தொன்றே.

   (இ - ள்.) இரும்பிடி தழீஇய யானை இழிமதம் கலந்து சேறாய் - கரிய பிடியைத் தழுவிய யானையின் பெருகும் மதம் கலந்து சேறாகி; சுரும்பொடு மணிவண்டு ஆர்க்கும் - (அதனாலே) சுரும்பும் வண்டும் ஆரவாரிக்கின்ற; துகில் கொடி மாடவீதி - துகிற் கொடிகளையுடைய மாடங்கள் நிறைந்த தெருவையுடைய; பெருங் கடிநகரம் பேசின் இராசமா கிருகம் என்பர் - பெரிய காவலையுடைய நகரைக் கூறின் இராசமா கிருகம் என்றுரைப்பர்; அருங்கடி அமரர்கோமான் அணிநகர் அனையது ஒன்று - (அந்நகர்) அரிய காவலையுடைய இந்திரனின் அழகிய நகரை ஒப்பதொன்றாம்.

   (வி - ம்.) இரும்பிடி - கரிய பெண்யானை, நகரத்தின் பெயர் பேசின் என்க. அமரர் கோமான் - இந்திரன். ஆயது - போன்றது.

( 445 )
3044 எரிமிடைந் தனைய மாலை
  யினமணி திருவில் வீசுந்
திருமுடி யார மார்பிற்
  சேணிக னென்ப நாம