| முத்தி இலம்பகம் |
1720 |
|
|
| 3049 |
மைபொதி குவளை வாட்கண் | |
| |
மல்லிகைக் கோதை நல்லார் | |
| |
நெய்பொதி நெஞ்சின் மன்னர் | |
| |
நிலம்பிறக் கிடுவ போலுங் | |
| |
கொய்சுவற் புரவி மான்றோ் | |
| |
குழுமணி யோடை யானை | |
| |
மெய்பொதிந் துயர்ந்த கோமான் | |
| |
விரைப்பலி சுமந்த வன்றே. | |
|
|
(இ - ள்.) மை பொதி குவளை வாள் கண் - மை தீட்டிய குவளை மலர்போலும் ஒளிவீசுங் கண்களையும்; மல்லிகைக் கோதை நல்லார் - மல்லிகை மாலையையும் உடைய மங்கையரும்; நெய்பொதி நெஞ்சின் மன்னர் - அன்பு பொதிந்த நெஞ்சினையுடைய மன்னரும் (அமர்ந்து ஏந்திவர); நிலம் பிறக்கிடுவ போலும் கொய் சுவல் புரவி மான்தேர் - நிலம் புறங்காட்டியோடுவனபோல் விரைந்து செல்லும், கொய்த பிடரி மயிரையுடைய குதிரைகள் பூட்டிய தேரும்; குழுமணி ஓடை யானை - தொகுதியான மணிகளிழைத்த ஓடையையுடைய யானைகளும்; மெய் பொதிந்து உயர்ந்த கோமான் - உண்மையறிவு பொதிந்து மேம்பட்ட அருகப்பெருமானுக்காக; விரைப்பலி சுமந்த - மணப்பொருள்களைச் சுமந்தன.
|
|
(வி - ம்.) விரைப்பலிகள் முன்னிரண்டு செய்யுளிலுங் கூறப்பட்டன. விரைப்பலிகளை மன்னரும் மங்கையரும் ஏந்தி அமர யானைகளும் தேர்களும் சுமந்து சென்றன.
|
|
நெய் : நேயம் என்பதன் விகாரம். 'நெய் பொதி குஞ்சி' என்றும் பாடம். இப்பாடத்திற்கு நெய் : கத்தூரி.
|
( 451 ) |
| 3050 |
கொடிக்குழாங் குஞ்சி பிச்சக் | |
| |
குழாநிறை கோல மாலை | |
| |
முடிக்குழா மூரி வானம் | |
| |
பால்சொரி கின்ற தொக்குங் | |
| |
குடைக்குழா மிவற்றின் பாங்கர்க் | |
| |
குளித்தது குளிர்சங் கார்க்கும் | |
| |
படைக்குழாம் பாரிற் செல்லும் | |
| |
பாற்கடல் பழித்த வன்றே. | |
|
|
(இ - ள்.) கொடிக்குழாம் - கொடித் தொகுதியும்; குஞ்சி - குஞ்சித் தொகுதியும்; பிச்சக் குழாம் - பிச்சத்தொகுதியும்; நிறைகோலம் மாலை முடிக்குழாம் - நிறைந்த அழகிய மாலையை
|