| முத்தி இலம்பகம் |
1721 |
|
|
|
யுடைய முடித்தொகுதியும்; மூரிவானம் பால் சொரிகின்றது ஒக்கும் குடைக்குழாம் - பெரிய வானம் பாலைப்பொழிவதைப் போன்ற குடைத்தொகுதியும்; இவற்றின் பாங்கர்க் குளித்தது - இவற்றின் அருகிலே குளித்ததாகிய; குளிர் சங்கு ஆர்க்கும் படைக்குழாம் - தண்ணிய சங்கு ஒலிக்கும் படைத்தொகுதியும்; பாரில் செல்லும் பால்கடல் பழித்தது - (தம்மிற் கூடிப் பசிய நிறம் கலந்து) பாரிலே நடக்கும் பாற்கடலைப் பழித்தது.
|
|
(வி - ம்.) பாரிற்செல்லும் பாற்கடல் இல்பொருளுவமை.
|
|
பிச்சம் - பீலிக்குடை, குஞ்சி - குஞ்சக்குடை, ஆகுபெயர். மூரி - பெரிய. பாங்கர் - பக்கம்.
|
( 452 ) |
| 3051 |
கனைகடல் கவரச் செல்லுங் | |
| |
கணமழைத் தொழுதி போலு | |
| |
நனைமலர்ப் பிண்டி நாத | |
| |
னல்லறங் கொள்ளை சாற்றிப் | |
| |
புனைமுடி மன்ன ரீண்டிப் | |
| |
பொன்னெயிற் புறத்து விட்டார் | |
| |
வினையுடைத் தின்ப வெள்ளம் | |
| |
விரும்பிய வேட்கை யானே. | |
|
|
(இ - ள்.) புனை முடி மன்னர் ஈண்டி - புனை முடியையுடைய மன்னர் திரண்டு; வினை உடைத்து இன்ப வெள்ளம் விரும்பிய வேட்கையான் - இருவினையைக் கெடுத்து, இன்பமாகிய வெள்ளத்தை விரும்பிய வேட்கையினாலே; நனைமலர்ப் பிண்டி நாதன் நல்அறம் கொள்ளை சாற்றி - தேன்மலர்ப் பிண்டிப் பெருமானின் நல்லறத்தை எங்கும் பரப்பி; பொன் எயில் புறத்துவிட்டார் - பொன்மதிலின் வெளியே தங்கினார்; கனை கடல் கவரச்செல்லும் கணமழைத் தொகுதி போலும் - (அவ்வாறு தங்கியது) ஒலி கடலிலே நீரை முகக்கச்செல்லும் கூட்டமாகிய முகில் தொகுதிபோலும்.
|
|
(வி - ம்.) கனைகடல் : வினைத்தொகை, மழை - முகில் : ஆகுபெயர். சாற்றி - பறையறைவித்து. விட்டார் - தங்கினார். வினை - இருவினை, வேட்கையான் எயிற்புறத்து விட்டார் என்க.
|
( 453 ) |
வேறு
|
| 3052 |
வண்டுசூழ் பூப்பலி சுமந்து தான்வலங் | |
| |
கொண்டுசூழ்ந் தெழுமுறை யிறைஞ்சிக் கோனடி | |
| |
யெண்டிசை யவர்களும் மருள வேத்தினான் | |
| |
வெண்டிரைப் புணரிசூழ் வேலி வேந்தனே. | |
| |
|