முத்தி இலம்பகம் |
1724 |
|
|
3056 |
மன்னவ கேண்மதி வானில் வாழ்பவர் | |
|
பொன்னியல் கற்பகப் போக பூமியா | |
|
ரென்னதுந் துறவல ரிறைவன் வாய்மொழி | |
|
சொன்னவா றல்லதெப் பொருளுந் தோன்றுமே. | |
|
|
(இ - ள்.) மன்னவ! கேள்! - அரசனே! கேட்பாயாக!; வானில் வாழ்பவர் - வானவரும்; பொன் இயல் கற்பகப் போக பூமியார் - பொன்னால் இயன்ற கற்பகமுடைய இன்பவுலகத்தினரும்; என்னதும் துறவலர் - சிறிதும் துறவார்; இறைவன் வாய்மொழி சொன்ன ஆறு அல்லது எப்பொருளும் தோன்றுமே? - இறைவன் ஆகமங்கூறிய நெறியானே அல்லாமல் எப்பொருளும் தோன்றுமோ? (தோன்றா).
|
(வி - ம்.) இவ்வாறு கூறினார் கணதரர்.
|
மன்னவ என்றது சேணிகனை. கேண்மதி என்புழி மதி முன்னிலையசை. என்னதும் - ஒரு சிறிதும். துறவலர் -துறவார். தோன்றுமே என்புழி ஏகாரம் எதிர்மறை. தோன்றமாட்டா என்றவாறு.
|
( 458 ) |
3057 |
அடிகளுக் கிடமருங் கிருந்த வாய்மலர்க் | |
|
கடிகமழ் தாமரைக் கண்ணி னானிவன் | |
|
வடிவமே வாய்திறந் துரைக்கும் வானவ | |
|
னொடிவறு பேரொளி யுட்கத் தக்கதே. | |
|
|
(இ - ள்.) அடிகளுக்கு இடம் மருங்கு இருந்த - அடிகளே! தங்கட்கு இடப்பக்கத்தே இருந்த; ஆய் கடிகமழ் தாமரை மலர்க் கண்ணினான் இவன் - ஆராய்ந்த மணங்கமழும் தாமரை மலர்போலுங் கண்ணினானாகிய இவனுடைய; உட்கத்தக்கது ஒடிவறு பேரொளி வடிவமே வாய்திறந்து வானவன் உரைக்கும் - அஞ்சத்தக்கதாகிய கெடாத பேரொளியுடைய உருவமே வாய்திறந்து வானவன் என்று கூறும்.
|
(வி - ம்.) அடிகளுக்கு : முன்னிலைப் புறமொழி. இடமருங்கு - இடப்பக்கம். கடி - மணம். உட்கத்தக்கது ஒடிவறு வடிவமே என இயைக்க, ஆதலால் யான் அவ்வாறு கூறினேன் என்பது குறிப்பெச்சம். இது சேணிகள் கூற்று. இந் நிகழ்ச்சி சீபுராணத்திற் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது: -
|
”மற்றொருநாள் சேணிக மன்னன் சமவ சரணமடைந்து அசோகவனத்துள் அசோக மரத்தின்கீழ்ப் பேரழகும் நல்லிலக்கணமும் உடையராய்த் தியானத்திலிருந்த சீவகமுனிவரைக் கண்டு அளவிறந்த வியப்புடையனாய் சுதன்மரென்னும் கணதரரையடைந்து அடிகளே, ஈதிருலக்கணமுடையராகிய இத் துறவி யாரென்று வினவ அவரும் அருளிச்செய்வார்,” எனவரும்.
|
( 459 ) |