| முத்தி இலம்பகம் |
1727 |
|
|
33.கேவலோற்பத்சி
|
வேறு
|
| 3062 |
முல்லைசூழ் முல்லை வேலி | |
| |
முயலொடு கவரி மேயுங் | |
| |
கொல்லைசூழ் குன்றத் துச்சிக் | |
| |
குருசினோற் றுயர்ந்த வாறும் | |
| |
வில்லுமிழ்ந் திலங்கு மேனி | |
| |
விழுத்தவ நங்கை மார்கண் | |
| |
மல்லலங் குமரர் வான்மேற் | |
| |
சென்றதும் வகுக்க லுற்றேன். | |
|
|
(இ - ள்.) முல்லை சூழ் முல்லைவேலி - முல்லை படர்ந்த வேலியையுடைய; முயலொடு கவரி மேயும் - முயலும் கவரியும் மேய்கின்ற; கொல்லைசூழ் குன்றத்து உச்சி - கொல்லை சூழ்ந்த மலையுச்சியிலே நின்று; குருசில் நோற்று உயர்ந்த ஆறும் - சீவகன் நோற்று உயர்ந்த படியையும்; வில் உமிழ்ந்து இலங்கும் மேனி விழுத்தவ நங்கைமார்கள் - ஒளி வீசி விளங்கும் மேனியையுடைய, சிறந்த தவம் புரிந்த அரிவையர்களும்; மல்லல் அம் குமரர் - திண்ணியவர்களான நந்தட்டன் முதலானோரும்; வான்மேல் சென்றதும் வகுக்கல் உற்றேன் - வானிடை போயதும் கூறலுற்றேன்.
|
|
(வி - ம்.) முல்லைவேலி என்புழி முல்லை வாளா இயற்கையடையாய் நின்றது. முல்லைவேலிக் கொல்லை, கவரிமேயும் கொல்லை எனத் தனித்தனி கூட்டுக. குருசில் - சீவசாமி. வில் - ஒளி. விழுத்தவம் - சிறந்ததவம், குமரர் : நந்தட்டன் முதலாயினோர்.
|
( 464 ) |
வேறு
|
| 3063 |
முழுதுமுந் திரிகைப் பழச் சோலைத்தே | |
| |
னொழுகிநின் றசும்பும் முயர் சந்தனத் | |
| |
தொழுதிக் குன்றந் துளும்பச்சென் றெய்தினான் | |
| |
பழுதில் வாய்மொழிப் பண்ணவ னென்பவே. | |
| |
|
|
(இ - ள்.) பழுது இல் வாய் மொழிப் பண்ணவன் - குற்றம் அற்ற வாய்மொழியை உடைய சீவகசாமி; முழுதும் முந்திரிகைப் பழச்சோலை - முற்றும் முந்திரிகைப் பழச்சோலையில்; தேன் ஒழுகி நின்று அசும்பும் உயர் சந்தனத் தொழுதிக் குன்றம் - தேன் சொரிந்து நிற்கையினாலே முற்றும் அசும்புகின்ற, உயர்ந்த சந்தனமரத் தொகுதியையுடைய குன்றிலே; துளும்பச் சென்று எய்தினான் - (ஆங்கு இருப்போர்) வருந்தச் சென்று சேர்ந்தான்.
|