| முத்தி இலம்பகம் |
1733 |
|
|
| 3074 |
வெளிறில்வாள் விளங்கு செம்பொன் | |
| |
வட்டமெய்ப் பொருள்க ளாகப் | |
| |
பிளிறுசெய் கருமத் தெவ்வர் | |
| |
பெருமதின் முற்றி னானே. | |
| |
|
|
(இ - ள்.) ஞானம் ஒளிறு தேர் - மெய்ஞ்ஞானமே விளங்குந்தேராக; இன் உயிர் ஓம்பல் பாய்மா - இனிய உயிரைக் காப்பாற்றலே குதிரையாக ; நல் சிந்தை ஓடைக் களிறு - நல்ல சிந்தையே முகபடாமுடைய களிறாக; கருணை காலாள் - அருளே காலாளாக; சீலம் ஆம் கவசம் - ஓழுக்கமே தனக்குக் காவலான கவசமாக; மெய்ப்பொருள்கள் வெளிறு இல் வாள் விளங்கு செம்பொன் வட்டம் ஆக - மெய்ப்பொருள்களே குற்றமற்ற வாளும் விளங்கும் பொன் கேடகமும் ஆகக்(கொண்டு) ; பிளிறு செய்கருமத் தெவ்வர் பெருமதில் முற்றினான் - ஆரவாரம் புரியும் இருவினையாகிய பகைவரின் பெரிய மதிலை வளைத்துக்கொண்டான்.
|
|
(வி - ம்.) ஒளிறுதேர் : வினைத்தொகை. பாய்மா - குதிரை. உயிரோம்பல்-உயிரைப் பாதுகாத்தல். ஓடை-முகபாடாம் நற்சிந்தைகளிறாக என மாறுக. கருணை காலாளாக என்க சீலம்-நல்லொழுக்கம், பிளிறு - ஆரவாரம். கருமத்தெவ்வர் -இருவினையாகிய பகைவர்.
|
( 476 ) |
| 3075 |
உறக்கெனு மோடை யானை | |
| |
யூணெனு முருவத் திண்டோ் | |
| |
மறப்பெனும் புரவி வெள்ளம் | |
| |
வந்தடை பிணிசெய் காலாட் | |
| |
டிறப்படப் பண்ணிப் பொல்லாச் | |
| |
சிந்தனை வாயில் போந்து | |
| |
சுறக்கட லனைய தானை | |
| |
துளங்கப்போர் செய்த தன்றே. | |
|
|
(இ - ள்.) உறக்கெனும் ஓடையானை - உறக்கம் என்னும் ஓடையணிந்த யானையும்; ஊன் எனும் உருவத் திண்தேர் உணவென்னும் அச்சமூட்டும் திண்ணிய தேரும்; மறப்பு எனும் புரவி வெள்ளம் - மறவி யென்னும் குதிரை வெள்ளமும்; வந்து அடை பிணிசெய் காலாள் - (ஐயும் வளியும் பித்தும்) வந்து சேரும் பிணிகளாகிய காலாட்களும் (அகிய நாற்படைகளையும்); திறப்படப் பண்ணி - கூறுபட அணிந்து; பொல்லாச் சிந்தனை வாயில் போந்து - அசுப் பரிணாமம் என்கிற வாயிலை விட்டுப் போந்து; சுறக்கடல் அனைய தானை - சுறா மீனையுடைய
|