பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 174 

கூறுவர், மற்றும் அவர் 306 முதல் 309 வரை உள்ள நான்கு செய்யுட்களையும் ஒரு தொடராக்கி மாட்டேற்று முடிபு கூறுவார்.

 

   அவர் கூறும் முடிபு:-

 

   ”தேவி புதல்வனை நோக்கிக், கோமானானவன் கணிகள் சாதகஞ் செய்ய ஓகை போக்கி, வீசிக். 'கறைவிடுமின், நிறுமின், சீமின், ஈமின், விலக்கல் வேண்டா' என அறைமின், 'வீழ்ந்தீர்க்கு நல்கும்' என அறை மின் என்று விரும்பப் பிறக்கும் நீ ஓஒ தீவினை செய்தேன் காண்டற்காகப் பிறக்கும்படி இத்தன்மைத்தாயிருந்தது; வேந்தே! இவ்விரண்டிலும் இவ்வாறாகிப் பிறப்பது மன்னர்க்கியல்போ? பேயாடக் கூகை பாராட்ட இதுவாகிப் பிறப்பது மன்னர்க்கியல்போ? கூறாய் என்றாள் என்க.'

 

   இவ்வாறு மொழிகளை எங்கிருந்தும் எடுத்து மாட்டேற்றுவது நூலாசிரியர் கருத்தாகாது.]

 

   ஓரி-நரி. கேள்விக்கின்னாவாக ஊளையிடும் நரி என்பார் வெவ்வாய் ஓரி என்றார். விளிந்தார் இறந்தோர். ஈமம் -சுடுகாடு. ஒவ்வாச் சுடுகாடு என்றாள், இறப்போர்க்கே பொருந்துவதன்றிப் பிறப்போர்க்குப் பொருந்தாத இடம் என்பது தோன்ற. உயர் அரங்கின் என்றது இகழ்ச்சி. பேய் வறிய ஆவியே ஆகலின் நிழல்போ னுடங்கி என்றாள். முழவம் முழங்க, மணிவிளக்கம் நின்றொளிர, அரண்மனை அரங்கில் மகளிராட, மாந்தர் மகிழ, புலவர் போற்றெடுப்பப் பிறககவேண்டிய நீ இவ்வாறாகிப் பிறப்பதோ என்றிரங்கியவாறு.

( 280 )
310 பற்றா மன்னன் நகர்ப்புறமால்
  பாயல் பிணஞ்சூழ் சுடுகாடா
லுற்றா ரில்லாத் தமியேனா
  லொதுங்க லாகாத் தூங்கிருளான்
மற்றிஞ் ஞால முடையாய்நீ
  வளரு மாறு மறியேனா
லெற்றே யிதுகண் டேகாதே
  யிருத்தி யாலென் னின்னுயிரே.

   (இ - ள்.) இஞ்ஞாலம் உடையாய் -இவ்வுலகுடைய மன்னனே; பற்றாமன்னன் நகர்ப்புறம் - நீ கிடக்கும் இடம் பகை வேந்தனின் நகரில் உள்ள இடமாயிற்று; பாயல் பிணம்சூழ் சுடுகாடு - நின் படுக்கை பிணங்கள் சூழ்ந்த சுடுகாடாகவிருந்தது; உற்றார் இல்லாத் தமியேன் - யானோ உரையாடற்கும் எவருமில்லாத தனிமையேன் ஆயினேன்; ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருள் - (இதைவிட்டு வெளியேற எண்ணின்) விலக இயலாத பேரிருள் சூழ்ந்துள்ளது; மற்றுநீ வளரும் ஆறும் அறியேன் - மேலும், நீ வளர்வதற்குரிய நெறியையும் யான்அறிகின்றிலேன்; என் இன்உயிரே - என் இனிய உயிரே!; இது கண்டு ஏகாது