பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1744 

அடுக்கிக் குவித்ததாகிய ஒரு குன்றெனவே விளங்கும்; விளம்பலாம்? - ஆதலால் (நமக்கும் அதன் தன்மை) கூற இயலும்.

   (வி - ம்.) உறுப்புகள் இரு சுடர்களையும் அடுக்கினாற் போலும் மெய் உலையின்கட் கிடந்த இரும்பு போன்ற நிறமுடைய குன்று போலும் விளங்கும் என்க.

   'இருவினையை வெறுத்துக் கெடுத்தாற்கு இயல்பாக உளதாம் நிறமாகிய அதனை, உறுப்பெல்லாந்தானே ஒளியைக் கான்று, எரியின் வாய்க் கிடந்து தன் கறுப்புத் தீர்ந்த இரும்பே சான்றன்றோ என்ற, குன்று போன்று விளக்கிக் கூறாநிற்கும்; ஆதலால், நமக்கும் அதன் தன்மை கூறலாம்' என்று நச்சினார்க்கினியர் கூறுவர்.

   இம் மூன்று செய்யுட்களும் ஆசிரியர் தம் மகிழ்ச்சியாலே எடுத்துக் காட்டுவமையான் உலகிற்கு அறிவித்தார்.

( 491 )

வேறு

3090 வானோ ரேந்து மலர்மாரி
  வண்ணச்சாந்தம் பூஞ்சுண்ணங்
கனார் பிண்டிக் கமழ் தாமங்
   கறையார் முகிலி னிறங்காட்டுந்
தேனார் புகைக ளிவையெல்லாந்
  திகைப்பத் திகைகண் மணநாறி
யானா கமழுந் திருவவிப்போ
  தமரர்முடிமே லணிந்தாரே.

   (இ - ள்.) வானோர் ஏந்தும் மலர்மாரி - வானவர் கொண்டு வந்த பெய்யும் பூமழையும்; வண்ணச் சாந்தம் - கலவைச் சந்தனமும்; பூஞ்சுண்ணம் - அழகிய சுண்ணப் பொடியும் ; கான் ஆர் பிண்டிக் கமழ்தாமம் - மணம் நிறைந்த அசோகின் மாலையும்; கறைஆர் முகிலின் நிறம் காட்டும் தேன்ஆர் புகைகள் - கருமை பொருந்திய முகிலின் ஒளியைக் காட்டும் இனிய புகைகளும்; இவையெல்லாம் திகைப்ப - இவை யாவும் கெட; திகைகள் மணம் நாறி - திசைகள் எங்கும் மணங்கமழ்ந்து; ஆனா கமழும் திருவடிப்போது அமரர் முடிமேல் அணிந்தார் - அமையாமற் கமழும் திருவடி மலரை வானவர் முடிமேல் அணிந்தனர்.

   (வி - ம்.) பூஞ்சுண்ணம் - அழகிய நறுமணப்பொடி, கான் - நறுமணம். கறை - கருநிறம், புகை - நறுமணப்புகை, திகை -திசை, ஆனா - அமையாதனவாய், வழிபட்டுப் பொருள்களின் நறுமணம் மிகுந்து, புலமெலாம் மணக்குங்கால் புரையில் பொருளின் திருவடிப் பொதின்கண் மணக்குமணம் சொல்லொணா தென்க.

( 492 )