| முத்தி இலம்பகம் |
1748 |
|
|
வேறு
|
| 3098 |
தீவினைக் குழவி செற்ற | |
| |
மெனும்பெயர்ச் செவிலி கையுள் | |
| |
வீவினை யின்றிக் காம | |
| |
முலையுண்டு வளர்ந்து வீங்கித் | |
| |
தாவினை யின்றி வெந்நோய்க் | |
| |
கதிகளுட் டவழு மென்ற | |
| |
கோவினை யன்றி யெந்நாக் | |
| |
கோதையர்க் கூற லுண்டே | |
|
|
(இ - ள்.) தீவினைக் குழவி - தீவினையாகிய குழவி; செற்றம் எனும் பெயர்ச் செவிலி கையுள் - செற்றம் என்கிற செவிலியின் கையிலேயிருந்து; வீவினை இன்றி - கெடுந்தொழில் இன்றி; காமம் முலை உண்டு வீங்கி வளர்ந்து; காமமாகிய முலையை உண்டு வீங்கி வளர்ந்து; தாவினை இன்றி - குதிக்கும் வினைகள் இன்றி; வெம்நோய்க் கதிகளுள் தவழும் என்ற - கொடிய நோய்க்கதிகளிலே தவழும் என்று கூறிய; கோவினை அன்றி - இத்தலைவனை அல்லாமல்; எம் நா கோதையர் கூறல் உண்டே? - எம்முடைய நாக்கள் குற்றமுடையவர்களைக் கொண்டாடுதல் இன்று.
|
|
(வி - ம்.) வீவினையின்றி - ஒழிதல் இன்றி. தீவினையின் தன்மையை அவன் கூறக்கேட்ட தேவியர் இங்ஙனங் கூறினார்.
|
( 500 ) |
| 3099 |
நல்வினைக் குழவி நன்னீர்த் | |
| |
தயாவெனுஞ் செவிலி நாளும் | |
| |
புல்லிக்கொண் டெடுப்பப் பொம்மென் | |
| |
மணிமுலை கவர்ந்து வீங்கிச் | |
| |
செல்லுமாற் றேவர் கோவா | |
| |
யெனுமிருள் கழிந்த சொல்லா | |
| |
வல்லிமே னடந்த கோவே | |
| |
யச்சத்து ணீங்கி னோமே. | |
|
|
(இ - ள்.) நல்வினைக் குழவி - நல்வினையாகிய குழவி; நல் நீர்த் தயா எனும் செவிலி; நல்ல தன்மையை உடைய அருளென்னுஞ் செவிலி; நாளும் புல்லிக் கொண்டு எடுப்ப - நாடோறும் தழுவியெடுப்ப; பொம்மென் மணிமுலை கவர்ந்து வீங்கி - பருத்த மெல்லிய அழகிய முலையை யுண்டு வீங்கி; தேவர் கோவாய்ச் செல்லும் - வானவர் வேந்தாய்ச் செல்லும்; எனும் இருள் கழிந்த சொல்லால் - என்று கூறிய மயக்கம் நீங்கிய மொழியாலே;
|