பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1752 

   (வி - ம்.) மற்று :அசை.

   இன்பம்: ஆகுபெயர்; அவா என்க. நான்குகதி - மக்கள் தேவர் நரகர் விலங்கு கதிகள். தீற்றி - ஊட்டப்பட்டு. பற்று -பெற்ற பொருள்மே னிகழ்வது; ஆர்வம் - பெறாதபொருள்மேனிகழுவது. நிருமலன் - இறைவன். அன்பு விற்று என்பது சிவகதிக்குப் பண்டமாற்றாகக் கொடுத்து என்றவாறு. சிவகதி-வீடுபேறு.

( 507 )
3106 வாட்கையம் மைந்த ராயும்
  வனமுலை மகளி ராயும்
வேட்கையை மிகுத்து வித்திப்
  பிறவிநோய் விளைத்து வீயாத்
தேட்கையிற் கொண்ட தொக்கு
  நிச்சநோய்ச் செற்றப் புன்றோற்
பூட்கையை முனியின் வாமன்
  பொன்னடி தொழுமி னென்றான்.

   (இ - ள்.) வேட்கையை மிகுத்து வித்தி - ஆசையைமிகுத்து விதைத்து ; வாள் கை அம் மைந்தராயும் - வாளைக் கையிலேந்திய அழகிய மைந்தராயும்; வனமுலை மகளிராயும்- அழகிய முலையை உடைய மகளிராயும்; பிறவி நோய் விளைத்து - பிறவிப் பிணியை விளைவித்து ; வீயா - கெடாமல்; தேள் கையில் கொண்டது ஒக்கும் - தேளைக் கையிலே பிடித்திருந்த தன்மையை ஒப்பதும்; நிச்சம் நோய் செற்றம் புன்தோல் - நாடோறும் (தாகமும் மோகமுமாகிய) நோயினையும் செற்றத்தினையும் உடையதும் ஆகிய புன் தோலாகிய; பூட்கையை முனியின் - மேற்கோளை வெறுத்தால்; வாமன் பொன் அடி தொழுமின் என்றான் - அருகனுடைய பொன்னடியை வணங்குமின் என்றான்.

   (வி - ம்.) பூட்கையையும் உடைய தோல் என்பர் நச்சினார்க்கினியர். 'வீயாது ' என்பது 'வீயா' என விகாரப்பட்டது ; ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

( 508 )
3107 தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோன்
மன்னுயிர் வைகலு மோம்பி வாழுமே
லின்னுயிர்க் கிறைவனா யின்ப மூர்த்தியாய்ப்
பொன்னுயி ராய்ப்பிறந் துயர்ந்து போகுமே.

   (இ - ள்.) தன் உயிர் தான் பரிந்து ஓம்பும் ஆறுபோல் - தன் உயிரைத் தான் விரும்பிக் காப்பாற்றும் வகைபோல; வைகலும் மன் உயிர் ஓம்பி வாழுமேல் - நாடோறும் பிறவுயிரக் காத்து வாழ்வனெனின்; இன் உயிர்க்கு இறைவனாய் இன்பமூர்த்தியாய்ப் பொன் உயிராய் - இனிய உயிர்க்குத் தலைவனாய்.