| முத்தி இலம்பகம் |
1754 |
|
|
| 3110 |
மல்குபூங் கற்பக மரத்தி னீழலா | |
| |
னல்குவா னொருவனை நயந்து நாடுமோ | |
| |
பில்குபூம் பிண்டியா னமிர்துண் டார்பிறர் | |
| |
செல்வங் கண்டதற் கவாச்சிந்தை செய்யுமோ. | |
| |
|
|
(இ - ள்.) மல்கு பூங்கற்பக மரத்தின் நீழலான் - வளம் நிறைந்த அழகிய கற்பக மாத்தின் நிழலில் இருப்பவன்; நல்குவான் ஒருவனை நயந்து நாடுமோ? - கொடையாளி ஒருவனை விரும்பி நாடுவானோ?; (அதுபோல) பில்குபூம் பிண்டியான் அமிர்து உண்டார் சிந்தை - தேன் துளிக்கும் பூம் பிண்டியான் அறத்தைக் கேட்டவர் சிந்தை; பிறர் செல்வம் கண்டு அதற்கு அவாச் செய்யுமோ? - மற்றவர்கள் செல்வத்தைக்கண்டு அதற்கு விருப்பங் கொள்ளுமோ?
|
|
(வி - ம்.) எடுத்துக்காட்டுவமை அணி.
|
|
நீழலான் - நீழலில் தங்குவான். உண்டார் சிந்தை என ஒட்டுக. அவாச் செய்யுமோ என ஒட்டுக.
|
( 512 ) |
| 3111 |
மணியுயிர் பொன்னுயிர் மாண்ட வெள்ளியி | |
| |
னணியுயிர் செம்புயி ரிரும்பு போலவாம் | |
| |
பிணியுயி ரிறுதியாப் பேசி னேனினித் | |
| |
துணிமின மெனத்தொழு திறைஞ்சி வாழ்த்தினார். | |
| |
|
|
(இ - ள்.) மணி உயிர் - வீடுபெற்ற உயிரும்; பொன் உயிர் - வானவர் உயிரும்; அணி வெள்ளியின் உயிர் - அழகிய மக்களுயிர்; செம்பு உயிர் - மக்களிற் கீழாயினோர் உயிரும்; விலங்கின் உயிரும்; இரும்புபோல ஆம் பிணி உயிர் - நரகளுயிரும்; இறுதிஆப் பேசினேன் - என முடிவாகக் கூறினேன்; இனித் துணிமின் என - இனி அவற்றைத் துணிவீராக என்று; இறைஞ்சித் தொழுது வாழ்த்தினார் - (அதுகேட்ட அவரும்) முடி வணங்கித் தொழுது ஏத்தினார்.
|
|
(வி - ம்.) மணியுயிர் - வீடுபெற்றவுயிர். பொன்னுயிர் - தேவருயிர். வெள்ளியுயிர் - மக்களுயிர். செம்புயிர் - மக்களிற் கீழாயினாருயிரும், விலங்குயிரும். இரும்புபோலவாம்பிணியுயிர் - நரகருயிர்.
|
( 513 ) |
| 3112 |
விண்ணின்மேன் மலர்மழை பொழிய வீங்குபாற் | |
| |
றெண்ணிலாத் திருமதி சொரியத் தேமலர் | |
| |
மண்ணின்மேன் மழகதிர் நடப்ப தொத்ததே | |
| |
யண்ணலா ருலாய்நிமிர்ந் தளித்த வண்ணமே. | |
| |
|
|
(இ - ள்.) அண்ணலார் உலாய் நிமிர்ந்து அளித்த வண்ணம் - அத்தலைவனார் அருளின்கண் மிகுந்து உலவி உலகுயிரை அருளிய தன்மை; விண்ணின்மேல் மலர்மழை பொழிய
|