பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1758 

னும் திருமகள் ஒரு பங்கிலாக; காவலன் தான் ஓர் கூறுஆ - சீவக மன்னன் தான் ஒரு பங்கிலாக; கண் இமைய்ர்து புல்லி - கண் இமைக்காமல் நோக்கித் தழுவி; முவுலகு உச்சி இன்பக் கடலினுள் மூழ்கினான் - மூவுலகின் உச்சியிலேயிருந்து இன்பக் கடலிலே அழுந்தினான்.

   (வி - ம்.) கேவல மடந்தை என்றது கேவல ஞானத்தை. கேழ் - நிறம். பொன் திருமகள்; ஈண்டுக் கேவல மடந்தைக்கு உவமவாகு பெயர். கற்புடைமைக்கு முல்லைக் கண்ணி கூறப்பட்டது. பின் எஞ்ஞன்றும் அகலாமை ஈண்டு கேவலமடந்தைக்குக் கற்பென்க. காவலன் : சீவகன்.

( 519 )
3118 பிரிதலும் பிணியு மூப்புஞ்
  சாதலும் பிறப்பு மில்லா
வரிவையைப் புல்லி யம்பொ
  னணிகிளர் மாடத் தின்றேன்
சொரிமது மாலை சாந்தங்
  குங்குமஞ் சுண்ணந் தேம்பாய்
விரிபுகை விளக்கு விண்ணோ
  ரேந்தமற் றுறையு மன்றே.

   (இ - ள்.) அம் பொன் அணி கிளர் மாடத்து - அழகிய பொன்னணி விளங்கும் மாடத்திலே; இன் தேன் சொரி மது மாலை - இனிய தேனைச் சொரியும் மலர் மாலையும்; சாந்தம் - சந்தனமும்; குங்குமம் - குங்குமமும்; சுண்ணம் - சுண்ணப்பொடியும்; தேன்பாய் விரிபுகை - தேன் கலந்த மிகுநறும் புகையும்; விளக்கு - விளக்கும்; விண்ணோர் ஏந்த - வானவர் ஏந்தி நிற்க; பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா அரிவையைப் புல்லி - பிரிவு பிணி முதுமை சாவு பிறப்பு என்பவை இல்லாத சேவல மடந்தையைத் தழுவி; உறையும் - வாழ்வான்.

   (வி - ம்.) அரிவை - கேவல மடந்தை (வீடு.) புல்லி - தழுவி. சீவகன் பொன்மாடத்தே விண்ணோர் மாலை முதலியவற்றை ஏந்த அரிவையைப் புல்லி உறையும் என்க.

( 520 )

தேவிமார் நோற்றுயர்வு

3119 வல்லவன் வடித்த வேல்போன்
  மலர்ந்துநீண் டகன்ற வாட்கண்
மெல்லவே யுறவி யோம்பி
  யொதுங்கியு மிருந்து நின்று