| முத்தி இலம்பகம் | 
1760  | 
 | 
  | 
| ”பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் | 
 | 
| செம்பொருள் காண்பது அறிவு” (குறள் - 358) | 
 | 
| 
    என்பதுமிது. 
 | 
( 522 ) | 
|  3121 | 
ஆசை யார்வமோ டைய மின்றியே |   |  
|   | 
யோசை போயுல குண்ண நோற்றிபி |   |  
|   | 
னேசு பெண்ணொழித் திந்தி ரர்களாய்த் |   |  
|   | 
தூய ஞானமாய்த் துறக்க மெய்தினார். |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆசை ஆர்வமொடு ஐயம் இன்றி - ஆசையும் பற்றும் ஐயமும் இன்றி; ஓசை போய் உலகுண்ண நோற்றபின் - புகழ்சென்று வானுலகுள்ளவற்றை நுகர நோற்ற பிறகு; ஏசு பெண் ஒழித்து இந்திரர்களாய் - பொல்லாததென்னும் பெண் பிறப்பைக் கைவிட்டு இந்திரர்களாய்; தூயஞானமாய்த் துறக்கம் எய்தினார் - தூயஞானத்தைப் பெற்றுத் துறக்கத்தை அடைந்தனர். 
 | 
| 
    (வி - ம்.) ஆர்வம் - இரதி - கன்மம். ஐயம் இன்றி என்றது, தரிசன விசுத்தியைக் கூறிற்று. 
 | 
( 523 ) | 
|  3122 | 
காம வல்லிகள் கலந்து புல்லிய |   |  
|   | 
பூமென் கற்பகப் பொன்ம ரங்கள்போற் |   |  
|   | 
றாம வார்குழற் றைய லார்முலை |   |  
|   | 
யேம மாகிய வின்ப மெய்தினார். |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) காம வல்லிகள் கலந்து புல்லிய - காம வல்லிகள் கூடித் தழுவிய; பூ மென் கற்பகப் பொன்மரங்கள்போல் - அழகிய அழகிய மெல்லிய பொன் மயமான கற்பக மரங்கள் போல; தாமவார்குழல் தையலார்முலை ஏம மாகிய இன்பம் எய்தினார் - ஒளியுறும் நீண்ட குழலையுடைய வான் மங்கையரின் முலையைத் தழுவும் காவலாகிய இன்பத்தை அடைந்தனர். 
 | 
| 
    (வி - ம்.) காமவல்லி - கற்பத்தின் மிசைப் படர்வதொரு பொன் பூங்கொடி : இது தெய்வ மகளிர்க்குவமை. கற்பகம் - இந்திரர் ஆயவர்க்குவமை. ஏவம் - காவல். ”இங்ஙனம் முயங்கித் தாம் எய்திய செல்வத்தை வியந்து கூறுதலின், அஃது ஊடலையும் புலவியையும் விளைத்ததென்பர் மேல்” என்பது நச்சினார்க்கினியர் குறிப்பு. 
 | 
( 524 ) | 
|  3123 | 
கலவி யாகிய காமத் தின்பயன் |   |  
|   | 
புலவி யாதலாற் பொன்னங் கொம்பனா |   |  
|   | 
ருலவு கண்மல ரூடற் செவ்விநோக் |   |  
|   | 
கிலைகொள் பூணினா ரிதயம் போழ்ந்ததே. |   |  
|   | 
 
 
 |