பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1762 

   (வி - ம்.) இது முதல் மூன்று பாட்டுக்கள் ஒருதொடர்.

   தவளை வாய்போன்ற வாயையுடைய கிண்கிணி என்க. கிண்கிணி - சதங்கை. கோலம் - அழகு. வாழ்த்துதல் - ஈண்டு நலம் பாராட்டுதல். எனா - என்று புகழ்ந்து . திவள - துவள.

( 528 )
3127 பன்ம ணிக்கதிர்ப் பரவை மேகலை
மின்ன ணிந்துகத் திருத்தி வெம்முலைப்
பொன்ன ணிந்துபூஞ் சுண்ணந் தைவர
நன்ம ணிக்குழை யிரண்டு நக்கவே.

   (இ - ள்.) பன் மணிக் கதிர்ப் பரவை மேகலை மின் அணிந்து உகத்திருத்தி - பல மணிகளையுடைய ஒளிவீசும் பரவிய மேகலையை மின்போல அணிந்து (மணி) சிந்தத் திருத்தியும; வெம்முலைப் பொன் அணிந்து - வெம் முலைமிசை பொன்னணி புனைந்தும்; பூஞ்சுண்ணம் தைவர - அழகிய சுண்ணப் பொடியைத் தடவியதால்; நன்மணிக் குழை இரண்டும் நக்க - நல்ல மணிகள் இழைத்த குழைகள் இரண்டும் ஒளிவீசின.

   (வி - ம்.) இவ்வாறு பலவகையினும்பாராட்டியதால்அம் மங்கையரின் காதணிகள் ஒளி வீசின; என்றது, ஊடல் தீர்ந்ததைக் குறிக்கும்.

   நச்சினார்க்கினியர் முற்செய்யுளில் உள்ள 'குவளைக் கண்மலர்' என்பதன் பின் 'குழையிரண்டும் நக்க' என்பதனை இணைத்து, 'கண்மலர்

னார்க்கு அது ஓர் தவறது ஆகும் - அஞ்சினவர்களுக்குத் தவறாகிய அது பிறந்தேவிடும்.

   (வி - ம்.) இவ்வாறு கூறி அவர் புலவியைத் தீர்த்தனர்.

   நெஞ்சு - மார்பு. நேர் - அழகு. இழை - அணிகலன். இழையால் அடி வருந்தும் என்றியைக்க. எனா - என்றுகூறி. பாவை, பூநுதால் இரண்டும் விளிகள்.

( 527 )
3126 தவளைக் கிண்கிணித் தாமஞ் சோ்த்தியுங்
குவளைக் கண்மலர்க் கோலம் வாழ்த்தியு
மிவளைக் கண்டகண் ணிமைக்கு மோவெனாத்
திவளத் தேமலர்க் கண்ணி சோ்த்தியும்.

   (இ - ள்.) தவளைக் கிண்கிணித் தாமம் சேர்த்தியும் - தவளையின் வாயைப்போன்ற கிண்கிணி மாலையை அடியிலே சேர்த்தும்; குவளைக் கண்மலர்க் கோலம் வாழ்த்தியும் - குவளை மலர்போன்ற கண்களின் அழகைப் புகழ்ந்தும்; இவளைக் கண்ட கண் இமைக்குமோ எனா - இவளைப் பார்த்த கண்கள் இமையா என்று புகழ்ந்து; தேன் மலர்க் கண்ணி திவளச்சேர்த்தியும் - தேனையுடைய மலர்மாலையை அசைய அணிவித்தும்;