பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1764 

   (வி - ம்.) இவை கூட்டத்தே நிகழ்வன. 'ஆவித்துத் தேன் சொரி கண்ணி'யென இயைப்பர் நச்சினார்க்கினியர்.

( 531 )
3130 இலங்கு கொம்பனார் காம மென்னும்போ்
கலந்த கள்ளினைக் கைசெய் தையென
மலர்ந்து வாய்வைத்தார் மணிகொள் வள்ளத்தே
நலங்கொள் சாயலார் நடுங்கி நையவே.

   (இ - ள்.) இலங்கு கொம்பனார் நலங்கொள் சாயலார் - விளங்கும் பூங்கொம்பனையாரும் நன்மை கொண்ட அழகினரும் ஆகிய அம் மங்கையர், நடுங்கி நைய - நடுங்கிச் சோர்வடைய; காமம் என்னும் பேர் கலந்த கள்ளினைக் கைசெய்து - காமம் என்னும் பெயர் கூடிய கள்ளை ஒழுங்கு செய்து; ஐ யென மலர்ந்து - அழகுற மகிழ்ந்து; மணிகொள் வள்ளத்தே வாய் வைத்தார் - முத்துக்களைக்கொண்ட கிண்ணத்திலே வாய்க்கொண்டார்.

   (வி - ம்.) மணிகொள் வள்ளத்துக்காமம் என்னும் பேர் கலந்த கள்ளினை வாய்வைத்தார் என்க. மணிகொள் வள்ளம் : முறுவல் கொண்ட வாய்க்கு உவமம். கள்ளுப்போலே எயிற்று நீர் மகிழ்ச்சி கொடுத்தலிற் கள்ளென்றார். இருதிறத்தாரும் இதழ் பருகின்மை கூறிற்றென்பர் நச்சினார்க்கினியர்.

   அவர், 'மணிகொள் வள்ளத்து நலம்கொள் காமம் என்னும் பேர் கலந்த கள்ளினை வாய் வைத்தார்' என்றது, முத்தைத் தன்னிடத்தே கொண்ட வாயாகிய வட்டிலிலேயிருந்து நன்மைகொண்ட வேட்கையென்னும் பெயர் கூடின கள்ளை அவர்கள் வாயிடத்தே வைத்தார்களென்றவாறு; என்றது, 'இருதிறத்தோரும் அதரபானம் பண்ணினமை கூறிற்று' என்று பொருள் கூறுவர். மேலும் அவர் இச்செய்யுளையும் முற்செய்யுளையும் ஒன்றாக்கிக்கொண்டு கூட்டுவர்.

   அப்பொருள் முடிபு:

   ”அவர்கள் தம் தேவியரை அங்ஙனம் கைசெய்து மலர்ந்து ஐயென, கொம்பனாராகிய சாயலார் நடுங்கி நையும்படி அவர் மெய்ந்நலத்தைப் புல்லி வாய்வைத்தார்; அப்பொழுது கண்ணிகள் சிந்தத் தார்புரளக் கிண்கிணி சிலம்ப மேகலை வாய்விட்டு ஆர்த்தன என்க.”

( 532 )
3131 வெம்மை கொண்டதே னமிர்த மெல்லவே
யம்மை யஞ்சொலா ரார வுண்டவர்
தம்மைத் தாமகிழ்ந் துறைய வித்தலைச்
செம்மை மாதவர்க் குற்ற செப்புவாம்.

   (இ - ள்.) வெம்மை கொண்ட தேன் அமிர்தம் - வேண்டுதல் கெண்ட இனிய அமிர்தத்தை; அம்மை அம் சொலார் மெல்ல ஆர உண்டவர் - அமைதியுறும் அழகிய மொழியினார்