| முத்தி இலம்பகம் |
1767 |
|
|
|
களிற்றிற்கு ஊற்றின்பமே மிக்க இன்பமாகலின், ஊற்றின்பத்திற்கு இஃது உவமையாயிற்று. ஊற்றின்பம் - தொடுதலான் வரும் இன்பம். தூய வாழ்க்கையினடிப்படை யிது.
|
( 537 ) |
வேறு
|
| 3136 |
காதணிந்த தோடொருபான் மின்னு வீசக் | |
| |
கதிர்மன்னுக் குழையொருபாற் றிருவில் வீசத் | |
| |
தாதணிந்த தாமங்க ளொருபாற் சோரத் | |
| |
தாமரைக்கண் டாமிரங்கப் புருவு மாட | |
| |
மாதணிந்த நோக்கினா ரல்குற் காசு | |
| |
மணிமழலைக் கிண்கிணியுஞ் சிலம்பு மேங்கப் | |
| |
போதணிந்த தாருடையப் பொருது பொங்கிப் | |
| |
புணர்முலைகள் போர்க்களந்தாங் கண்ட வன்றே. | |
|
|
(இ - ள்.) மாது அணிந்த நோக்கினார் அல்குல் காசும் மணி மழலைக் கிண்கிணியும் சிலம்பும் ஏங்க - காதல் அமைந்த பார்வையினாரின் அல்குலில் அணிந்த மேகலைக் காசும் ஒலிக்கும் மணிக் கிண்கிணியும் சிலம்பும் ஒலிக்க (அவர்களுடன் வானவர் பொருதலாலே); காது அணிந்த தோடு ஒருபால் மின்னு வீச - காதில் அணிந்த தோடு ஒரு பக்கம் ஒளி வீச; கதிர் மின்னுக்குழை ஒருபால் திருவில் வீச - ஒளிதரும் மின்னுக்குழை ஒரு பக்கத்தில் வான வில்லென ஒளிவிட; தாது அணிந்த தாமங்கள் ஒருபால் சோர - பூந்தாது பொருந்திய மாலைகள் ஒருபக்கத்தே சோர; தாமரைக்கண் தாம் இரங்க - தாமரை மலரனைய கண்கள் உவகைக் கண்ணீர் சிந்த; புருவம் ஆட - புருவம் ஏறி வளைய; போது அணிந்த தார் உடைய - (கணவரின்) மலர் பொருந்திய மாலை உடைய; புணர்முலைகள் பொங்கிப் பொருது - இரு முலைகளும் விம்மிப் பொருதலால்; போர்க்களம் கண்ட - காமப் போர்க்களத்தை (அம் முலைகள்) கண்டன.
|
|
(வி - ம்.) பொருது - பொர : எச்சத்திரிபு.
|
|
மின்னு - ஒளி. திருவில் - அழகிய ஒளி. தாது - பூந்துகள். தாம் : அசை. மாது - காதல். பொருது - பொர. தாம் : அசை. அன்றும் ஏயும் அசைகள்.
|
( 538 ) |
| 3137 |
முழுதார மின்னுமுலைக் குவட்டினான்மொய்ம் | |
| |
மார்பிற்குங் குமச்சே றிழுக்கிவீழ | |
| |
வுழுதார்வம் வித்தி யுலப்பிலாத | |
| |
நுகர்ச்சிவிளைத் தலர்ந்தகற் பகத்தின்கீ | |
| |
|