பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1769 

இருந்து பண்முற்றுப் பெறப் பாடக் கேட்டும்; கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப - கிண்கிணியுஞ் சிலம்பும் ஒலிக்க; முரிபுருவ வேல் நெடுங்கண் விருந்து செய்ய - முரிபுருவமும் வேலனைய நெடுகண்களும் விருந்து செய்ய; கண் கனிய நாடகம் கண்டு - கண்ணுருகும் நாடகம் ஆடக் கண்டும்; விண்கனிய - விண்ணில் உள்ளோர் மனம் உருக; அமரர் காமக் கொழுந்து ஈன்று - அவ்வானவர்கள் காமக் கொழுந்து பெற்று; தம் தவம்தாம் மகிழ்ந்தார் - தம் தவப்பயனைத் தாம் மகிழ்ந்தனர்.

   (வி - ம்.) மண்ணிடுதல் - மார்ச்சனையிடுதல்.

   நச்சினார்க்கினியர், 'கண்கள் காமமாகிய கொழுந்தை ஈன்று கொடுத்து விருந்து செய்ய' எனக் கூட்டுவர்.

   மற்றும் அவர், 'விண்ணிலுள்ளோர் மனம் உருக, அத் தேவர், முழவம் விம்ம, யாழும் குழலும் பாண்டிலும் இரங்கப் பாவைமார் தாம் தோடும் குண்டலமும் பதைப்ப இருந்து பண்முற்றுப்பெறப் பாட, அவர்கள் கண்கள் விருந்து செய்யக் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப நாடகத்தைக் கண்ணுருகக் கண்டு மகிழ்ந்தார்' என்று பொருள் கூறுவர்.

( 540 )

வேறு

3139 முருகுடைந்த பூங்கோதை முத்தணிந்த தோளா
ரொருகுடங்கைக் கண்ணா லுளங்கிழிய வேவுண்
டருகடைந்த சாந்தழிய வம்முலைமேல் வீழ்ந்தார்
திருவடைந்த நீண்மார்பிற் றேந்துளிக்குந் தாரார்.

   (இ - ள்.) முருகு உடைந்த பூங்கோதை முத்து அணிந்த தோளார் - தேன் வழிந்த மலர்க் கோதையையும் முத்தையும் அணிந்த தோளாருடைய; ஒரு குடங்கைக் கண்ணால் உளம் கிழிய ஏவுண்டு - ஒரு குடங்கையளவு கண்களால் உள்ளம் பிளக்கத் தாக்கப்பெற்று; அருகு அடைந்த சாந்து அழிய - முலையின் பக்கத்திற் பூசிய சந்தனம் அழியும்படி; அம் முலைமேல் - அம் முலைகளின் மேல்; திரு அடைந்த நீண்மார்பின் தேன் துளிக்கும் தாரார் - திருமகள் பொருந்திய நீண்ட மார்பின தேன் னிலேற்றும் மாலையினார்; வீழ்ந்தார் - தழுவிக்கிடந்தார்.

   (வி - ம்.) முருகு - தேன், முத்து - முத்துமாலை, தாரார் தோளார் கண்ணால் ஏவுண்டு முலைமேல் வீழ்ந்தார் என்க.

( 541 )
3140 நிலவி யொளியுமிழு நீளிலைவேற் கண்ணார்
கலவித்தூ தாகிய காமக்கை காய்த்திப்
புலவிப் படைபயிலப் பூச்செய்த கோல
முலவித் துறக்க மொளிபூத்த தன்றே.