பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1771 

3142 பகடு படவடுக்கிப் பண்ணவனார்
  தம்மொளிமே னின்றாற் போலுந்
தகடு படுசெம்பொன் முக்குடையான்
  றாளிணையென் றலைவைத் தேனே.

   (இ - ள்.) முகடு மணி அழுத்தி - உச்சியில் மணியை அழுத்தி; முள் வைரம் உள் வேய்ந்து - கூரிய வைரத்தை உள்ளே அழுத்தி; வாய் முத்தம் சூழ்ந்து - விளிம்பிலே முத்தமாலை சூழ்ந்து; அகடு பசுமணி ஆர்ந்து - நடுவே நீலமணி நிறைந்து; அங்காந்து இருள் பருகி - வாயைத் திறந்து இருளைப் பருகி ; அடுபால் விம்மி - காய்ச்சின பால் போன்ற ஒளியை முத்துச் சொரிந்து ; பகடுபட அடுக்கி - பெருமைபெற மூன்றாக அடுக்கி; பண்ணவனார் தம் ஒளிமேல் நின்றால் போலும் - இறைவனார் ஒளி மேலே நின்றாற் போன்ற; தகடுபடு செம்பொன் முக்குடையான் தாளிணை என்தலை வைத்தேன் - தகடாகப் பொருந்திய பொன்னாலாகிய முக்குடையானின் தாளிணைகளை என் தலைவைத்தேன்.

   (வி - ம்.) முகடு - உச்சி, முள் - கூர்மை. வாய் - விளிம்பு. அகடு - நடுவிடம். அடுபால் : வினைத்தொகை. பகடு - பெருமை. பண்ணவனார் - அருகக் கடவுள். முக்குடையான் - அருகக் கடவுள்.

   இவ்விலக்கியம் இடுக்கணின்றி இனிது முடிந்த மகிழ்ச்சியான் மீட்டும் வணங்கினார்.

( 544 )

ஓம்படை

3143 முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்து
  வாய்முரன்று முழங்கி யீன்ற
மெய்ந்நீர்த் திருமுத் திருபத்தேழ்
  கோத்துமிழ்ந்து திருவில் வீசுஞ்
செந்நீர்த் திரள்வடம்போற் சிந்தா
  மணியோதி யுணர்ந்தார் கேட்டா
ரிந்நீர ராயுயர்வ ரேந்துபூந்
  தாமரையாள் காப்பா ளாமே.

   (இ - ள்.) முந்நீர் வலம்புரி - சோழகுலமாகிய கடலிலே பிறந்த வலம்புரி; சோர்ந்து அசைந்து - பிறர் குற்றம் கூறுகின்றார் என்று தளர்ந்து நடுங்கி; வாய் முரன்று முழங்கி - வாயினால் மெல்ல இசைத்துப் பின் மிகவும் முழங்கி; ஈன்ற மெய்நிர்த் திருமுத்து இருபத்தேழ் - பெற்ற தன் மெய்விடத்து நீர்மையாகிய அழகிய முத்துக்கள் இருபத்தேழையும்; செந்நீர்த்திரள் - சிவந்த நீர்மையையுடைய மாணிக்கத் திரளையும்; வடம