பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 179 

   பாயல், பெரும்பெயர் முருக” (5-48- 50) என்றார் பரிபாடலினும். நா . மொழிக்கு ஆகுபெயர் ஒன்றாது நின்ற கோ என்றது கட்டியங்காரனை. விசயை நெஞ்சம் நன்கு தேறியிருத்தற் பொருட்டுக் ”கோவினை யடர்க்க வந்து கொண்டுபோம் ஒருவன் இன்னே” என்றது தெய்வம் என்க. இது 'முன்னம் நீ வளருமாறும் அறியேன்' என்று வருந்தியதற்குத் தேற்றுரை என்றுணர்க.

( 287 )
317 சின்மணி மழலை நாவிற்
  கிண்கிணி சிலம்போ டேங்கப்
பன்மணி விளக்கி னீழ
  னம்பியைப் பள்ளி சோ்த்தி
மின்மணி மிளிரத் தேவி
  மெல்லவே யொதுங்கு கின்றா
ணன்மணி யீன்று முந்நீர்ச்
  சலஞ்சலம் புகுவ தொத்தாள்.

   (இ - ள்.) மழலை சின்மணி நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க- மழலைபோல் ஒலிக்கும் சில மணிகளாகிய நாவினையுடைய கிண்கிணியும் சிலம்பும் ஏங்குதல் செய்ய; பன்மணி விளக்கின் நிழற் பள்ளி நம்பியைச் சேர்த்தி - பல மணிகளாகிய விளக்கின் நிழலிலே அமைத்த பள்ளியில் நம்பியைக் கிடத்தி; மின்மணி மிளிர மெல்ல ஒதுங்குகின்றாள் தேவி - ஒளிவிடும் மணிகள் ஒளி செய மெதுவாக விலகும் விசயை; சலஞ்சலம் நன்மணி யீன்று முந்நீர் புகுவது ஒத்தாள் - சலஞ்சலம் மாணிக்கத்தை யீன்று கடலிற் புகுவது போன்றாள்.

 

   (வி - ம்.) மணியாகிய நா. பன்மணி - உயிர்நீத்தவர் பூண்டமணி. நீழல்: விகாரம். தெய்வம் ஒரு பள்ளியைத் தேவி அறியாதவாறு அமைத்தது. அது பின்பு ஆசிரியன், 'பூந்தவிசின் உச்சி' (சீவக. 386) என்பதனாலும் பெற்றாம்.

( 288 )
318 ஏதிலா ரிடர்பன் னூறு
  செய்யினுஞ் செய்த வெல்லாந்
தீதில வாக வென்று
  திருமுலைப் பான்ம டுத்துக்
காதலான் பெயர்சு மந்த
  கதிர்மணி யாழி சோ்த்திக்
கோதைதாழ் குழலி னாளைக்
  கொண்டுபோய் மறைய நின்றாள்.

   (இ - ள்.) ஏதிலார் பல்நூறு இடர் செய்யினும் - அயலார் பலநூறு துன்பங்கள் செய்தாலும் ; செய்த எல்லாம் தீதுஇல