| நாமகள் இலம்பகம் |
181 |
|
வேறு
|
|
| 320 |
நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடூர் |
| |
கோளொடு குளிர்மதி வந்து வீழ்ந்தெனக் |
| |
காளக வுடையினன் கந்து நாமனும் |
| |
வாளொடு கனையிருள் வந்து தோன்றினான். |
|
|
(இ - ள்.) குளிர்மதி நாளொடு நடப்பது வழுக்கி - தண்ணிய திங்கள் நாண்மீன்களொடு செல்லும் நிலைதவறி; மின்னொடு ஊர்கோளொடு வந்து வீழ்ந்தென - மின்னொடு செல்லும் முகிலுடன் வந்து நிலத்தே விழந்தாற்போல; கந்துநாமனும் காளக உடையினன் கனையிருள் வாளொடு வந்து தோன்றினான் - கந்துக் கடன் என்னும் பெயருடைய வணிகனும் கரிய உடையினனாய் மிக்க இருளிலே வாளொடு வந்து சேர்ந்தான்.
|
|
|
(வி - ம்.) நடப்பது: தொழிற்பெயர். ஊர் கோள்:வினைத்தொகை. கோள் - பாம்புமாம். இதற்குக், 'கோளொடும்' என உம்மை விரிக்க. நாமனும்: உம்மை : சிறப்பு. உடையினன்: முற்றெச்சம்.
|
|
|
நாள் - அசுவனி முதலிய மீன். ஊர்கோள் - முகில். காளகம் - கருமை. கந்துநாமன் - கந்துக்கடன் என்னும் பெயரையுடையோன். கனை - மிகுதி
|
( 291 ) |
| 321 |
வாள்கடைந் தழுத்திய கண்ணி னார்கடந் |
| |
தோள்கடைந் தழுத்திய மார்பன் றூங்கிரு |
| |
ணீள்சுடர் நிழன்மணி கிழிப்ப நோக்கினா |
| |
னாள்கடிந் தணங்கிய வணங்கு காட்டுளே. |
|
|
(இ - ள்.) வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள்தம் - வாளைக் கடைந்து பதித்தாற்போன்ற கண்ணையுடைய மங்கையரின்; தோள் கடைந்து அழுத்திய மார்பன் - தோள்கள் கடைந்து அழுந்தத் தழுவிய மார்பையுடைய அவ் வணிகன்; ஆள்கடிந்து அணங்கு அணங்கிய காட்டுள் - ஆட்களைக் கடிந்து அணங்குகள் வருத்திய காட்டில்; தூங்கு இருள் நீள்சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான் - மிகுந்த இருட்டினைச் சிறந்த ஒளியைத் தரும் மணி ஒன்று பிளத்தலால் அவ்வொளி வந்த சார்பிலே நோக்கினான்.
|
|
|
(வி - ம்.) தோள் கடைதல் - தழுவுதல் வகை. அணங்குகள் ஆளைக் கடிந்து அணங்கிய: காட்டிற்கு அடை. அணங்குகள் = பேய்கள்.
|
|
|
[இங்குக் கூறிய நிழல்மணி நம்பியின்பால் விசயை வைத்த ஆழியிலிருந்தது.]
|
( 292 ) |