| நாமகள் இலம்பகம் | 
182  | 
  | 
|  322 | 
அருப்பிள முலையவர்க் கனங்க னாகிய |  
|   | 
மருப்பிளம் பிறைநுதல் மதர்வை வெங்கதிர் |  
|   | 
பரப்புபு கிடந்தெனக் கிடந்த நம்பியை |  
|   | 
விருப்புள மிகுதியின் விரைவி னெய்தினான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மருப்புஇளம் பிறைநுதல் அரும்புஇள முலையவர்க்கு அனங்கன் ஆகிய - இரு முனைகளையுடைய இளம்பிறை அனைய நெற்றியையும் அரும்பனைய இளமுலைகளையும் உடைய மங்கையர்க்குக் காமனாதற்காக; மதர்வை வெங்கதிர் பரப்புபு கிடந்தென - மயக்கத்தைத் தரும் இளஞாயிறு தன் கதிர்களைப் பரப்பிக் கிடந்தாற்போல; கிடந்த நம்பியை - கிடந்த குழந்தையை; விருப்புஉளம் மிகுதியின் விரைவின் எய்தினான் - விருப்பம் உள்ளத்திலே மிகுந்ததனாற் கடிதின் எய்தினான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) அரும்பு: அருப்பு என வலித்தது செய்யுள் விகாரம். 'கிடந்ததென' என்பதும் 'கிடந்தென' ஆனது விகாரம். பரப்புபு - பரப்பாநிற்க; வினையெச்சம். 
 | 
( 293 ) | 
|  323 | 
புனைகதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம் |  
|   | 
வனைமலர்த் தாளினான் மறைத்து வண்கையாற் |  
|   | 
றுனைகதிர் முகந்தென முகப்பத் தும்மினான் |  
|   | 
சினைமறைந் தொருகுரல 'சீவ' என்றதே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வனைமலர்த் தாரினான் - மலரால் வனையப்பெற்ற மாலையினான்; புனைகதிர் திருமணிப் பொன்செய் மோதிரம் மறைத்து - அழகிய ஒளிவிடும் மணியையுடைய பொன்னாழியை(ப் பிறரறியாதிருக்க) மறைத்து; வண்கையால் துனை கதிர் முகந்துஎன முகப்ப - வண்மையுடைய கையால் விரையுங் கதிரை முகப்பதுபோல வாரியெடுக்க; தும்மினான் - (நம்பி) தும்மினான்; ஒருகுரல் சினை மறைந்து சீவ என்றது - (அப்போது) ஒரு குரல் மரக்கிளை மறைவிலிருந்து (தெய்வத்தால்) சீவிப்பாயாக என்று கூறப்பட்டது. 
 | 
  | 
| 
    (வி - ம்.) விசயை அச்சத்தால் தன் மனத்திலேயே வாழ்த்திக் கொண்டாள் என்பது தோன்ற ஒரு குரல் என்றார். 
 | 
  | 
| 
    வனைதல் - கட்டுதல். துனைகதிர் - இருளை நீக்க விரையுங் கதிர்' எல்லாப் புலன்களுக்கும் விருப்பமுண்டாவதால். 'முகப்ப' என்றார். 'மன்னெயின் முகவை' (புறநா. 373) என்றார். பிறரும். தும்முதல் நன்னிமித்தம். சீவ வியங்கோட் பொருளில் வந்த வடசொல். 
 | 
  | 
| 
    சீவகசாமியை எடுத்து வளர்த்தற்குரிய அறமுடைய கைஎன்பார்' ”வண்கை” என்றார். துனைகதிர்: வினைத்தொகை. 
 | 
( 294 ) |