பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 185 

யுடைய மாலையாள்; தன்உள் அலைத்து எழுதரும் உவகை ஊர் தர - தன் மனத்திலே அலை பாய்ந்து உண்டாகும் களிப்பு மிகுதலால்; வள்ளலை வல்விரைந்து எய்த- தன் கணவனை மிகவும் கடிது சென்று நெருங்க; வெள்இலை வேலினான் நம்பியை விரகின் நீட்டினான் - வெள்ளிய இலைமுகமுடைய வேலினான் நம்பியைச் சூழ்ச்சி செய்து கொடுத்தான்.

 

   (வி - ம்.) 'இது மக வழியின் வாழேன்' (சீவக. 1124) என்றவள் உயிரையும் மேற் பொருளையுங் கொடுத்தலின் வள்ளல் என்றார். விரகு: விசயை அணிந்ததிலகத்தைமாற்றியும் மோதிரத்தை மறைத்தும் தன் மகனென நம்பும்வகையிற் கொடுத்தல்.

( 299 )
329 சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம்
விரிமுக விசும்புற வாய்விட்ட டார்த்தன
வெரிமுக நித்தில மேந்திச் சேந்தபோற்
கரிமுக முலையினார் காய்பொன் சிந்தினார்.

   (இ - ள்.) சுரிமுக வலம்புரி துவைத்த - (அப்போது) சுரித்த முகமுடைய வலம்புரிகள் முழங்கின; தூரியம் விரிமுக விசும்புஉற வாய்விட்டு ஆரவாரித்தன; எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்தபோல் - ஒளிவிடும் முத்துக்கள் அணிந்ததாற் கறுத்து போன்ற; கரிமுக முலையினார் காய்பொன் சிந்தினார் - கரிய கண்களையுடைய முலையினார் மாசற்ற பொன்னை வறியவர் கொள்ள வழங்கினர்.

 

   (வி - ம்.) சுரிமுகம் - சுருளுடைய வாய். துவைத்த: பலவறி சொல். கரிமுகம் - கரிந்த முகம். மிகுதியாக வழங்கினார் என்பார், சிந்தினார் என்றார். காய்பொன் : வினைத்தொகை.

( 300 )
330 அழுகுரல் மயங்கிய வல்ல லாவணத்
தெழுகிளை மகிழ்ந்தெம தரசு வேண்டினான்
கழிபெருங் காதலான் கந்து நாமனென்
றுழிதரு பெருநிதி யுவப்ப நல்கினான்.

   (இ - ள்.) அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து - (அரசன் இறந்ததால்) அழுகுரல் கலந்தொலித்த துன்பக் காட்சியை உடைய கடைத்தெருவிலே; கந்துநாமன் கழிபெருங் காதலான் - கந்துக்கடன் (எம்மிடம் கொண்ட) நனிமிகு காதலினால்; எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான் என்று - வளரும் உறவாக எம்மை விரும்பி எம் அரசை விரும்பினான் என்று எண்ணி; உவப்ப உழிதரு பெருநிதி நல்கினான் - அவன்