நாமகள் இலம்பகம் |
188 |
|
(வி - ம்.) செய்வதை: வினைத்திரிசொல். கேட்டே : ஏ : ஈற்றசை. இருவர்க்கும் ஒருமனம். ஓடு : உடனிகழ்சசி. தெருமரு தெய்வம்: புதல்வன் அன்னப் பார்ப்பை முற்பிறப்பிற் பிரித்த தீவினையை உறுகின்ற தன்மையைத் தான் ஆராய்ந்து, அதற்கு அவனை வேறோரிடத்துப் பிரித்து விசயையைத் தனியே கொண்டுபோதற்கு வருந்துகின்ற தெய்வம். செப்பியது : கணவனை யிழந்தார்க்கு நோன்பு கடனாதலின் இயைவதொரு கருமம் விசயைக்குக் கூறியது. அது மேல்வருவது.
|
( 305 ) |
335 |
மணியறைந் தன்ன வரியற லைம்பாற் |
|
பணிவருங் கற்பின் படைமலர்க் கண்ணாய் |
|
துணியிருட் போர்வையிற் றுன்னுபு போகி |
|
யணிமணற் போ்யாற் றமரிகை சார்வாம். |
|
(இ - ள்.) மணிவரி அறல் அறைந்த அன்ன ஐம்பால் - நீல மணியிலே வரிவரியான கருமணலைப் பதித்தாற்போன்ற ஐம்பாலையும்; பணிவரும் கற்பின் - உலகெலாம் ஏவலில் நிற்க வரும் கற்பினையும்; படைமலர்க் கண்ணாய் - படைபோலும் பூப்போலுங் கண்களையும் உடையாய்!; இருட்போர்வையில் துன்னுபு போகி - இருளாகிய போர்வையிலே மறைந்து சென்று; அணிமணல் பேர்யாறு அமரிகை சார்வாம் - அழகிய மணலையுடைய பேராறாகிய அமரிகையை அடைவோம். துணி - இதனை உறுதிகொள்.
|
|
(வி - ம்.) பகை நிலத்தை இருளிலேயே கடந்து எல்லைக்கப்பாலுள்ள அமரிகையை அடைவதற்குத் துணிவுகொள் என்றாள், கடத்தற்குரிய விரைவை உட்கொண்டு.
|
|
ஐம்பால் : ஐந்து வகையாக முடிக்குங் கூந்தல். படை = ஆயுதம்.
|
|
நீலமணியின்கண் பதித்தாற்போன்ற வரியாகிய அறலையுடைய ஐம்பால் என்பதே பொருந்தும். அறல் - அற்றற்றுக் கிடக்கும் வரிகள் என்க. வரியறல்: பண்புத்தொகை. பணிவரும் என்றற்குப் பலரும் தொழுதல் வருதற்குக் காரணமான கற்பெனிமாம். என்னை? பத்தினிப் பெண்டிரை யாரும் தொழுதல் உண்மையின் என்க. துணி. ஏவல் வினை. அமரிகைப் பேர்யாற்றணி மணல் என மாறுக.
|
( 306 ) |
336 |
அமரிகைக் கோசனை யைம்பது சென்றாற் |
|
குமரிக் கொடிமதிற் கோபுர மூதூர் |
|
தமரியல் ஓம்புந் தரணி திலகம் |
|
நமரது மற்றது நண்ணல மாகி. |
|
(இ - ள்.) அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால் - அந்த அமரிகையிலிருந்து ஐம்பது யோசனை தொலைவு சென்றால்; கொடிக்குமரி மதில் கோபுரம் மூதூர் தமர்இயல் ஓம்பும் தாணி திலகம் நமரது - கொடியையுடைய அழியா மதிலையுமங் கோபுரத்
|
|