| நாமகள் இலம்பகம் |
200 |
|
|
இப்போது தன் கையே இலைக்கறியை அருளிச் செய்ய இருத்தல் வறுமைக் கொடுமையைக் காட்டுகிறது. எனவே, செல்வம் நிலையாமை ஈங்குக் கூறப்படுகிறது. ஆனால், நச்சினார்க்கினியர், 'உணவு ஒழிந்து நுகர்ச்சியே நிகழ்ந்தமையின் நோக்கிலள்' என்பர். நுகர்ச்சியினால் மெய்சோர்ந்தால் உணவு முதலியன கொண்டு சோர்வைப் போக்க வேண்டுதலின் உணவு ஒழிந்து நுகர்ச்சி நிகழ்தல் இயல்பன்று.
|
|
|
அமிர்தம் - அடிசிலுக்கு உவமவாகுபெயர். பாவை - கொல்லிப் பாவை. காந்தளினது திருமணிப் துப்புப்போன்ற முன்கை என்க. அருளிச்செய்ய என்றது அருள என்றும் ஒரு சொன்னீர்மைத்து. இதனை, அருளி என்றும், செய்ய என்றும் பிரித்து நச்சினார்க்கினியர் அருளி என்பதனை அருள என்று திரித்தும் , செய்ய என்பதனைத் தெய்வத்திற்கு அடையாக்குவர். இங்ஙனம் செய்தலிற் போதப் பயனின்மை காண்க.
|
( 325 ) |
| 355 |
மெல்விரன் மெலியக் கொய்த |
| |
குளநெல்லும் விளைந்த ஆம்ப |
| |
லல்லியு முணங்கு முன்றி |
| |
லணில்விளித் திரிய வாமான் |
| |
புல்லிய குழவித் திங்கட் |
| |
பொழிகதிர்க் குப்பை போலு |
| |
நல்லெழிற் கவரி யூட்ட |
| |
நம்பியை நினைக்கு மன்றே. |
|
|
(இ - ள்.) மெல்விரல் மெலியக் கொய்த குள நெல்லும் - (தவமகளிர்) மென்மையான விரல்கள் வருந்தப் பறித்த குளநெல்லும்; விளைந்த ஆம்பல் அல்லியும் - முற்றிய ஆம்பலல்லியின் அரிசியும், உணங்கும் முன்றில் - உலரும் வாயிலில் ; அணில் விளித்து இரியப் புல்லிய ஆமான் குழவி - அணில் கத்திக்கொண்டோட வந்து அணைந்த காட்டுப் பசுவின் கன்றை; திங்கள் பொழி கதிர்க் குப்பை போலும் நல் எழில் கவரி ஊட்ட - திங்கள் பெய்யும் கதிர்த்திரள் போலும் அழகிய மயிர்த்திரளையுடைய கவரிமான் பாலூட்ட ; நம்பியை நினைக்கும் - நம்பி பிறர்பாலை உண்டு வளர்வதை விசயை நினைப்பாள்.
|
|
|
(வி - ம்.) கவரி - கவரிமான் : சினை யாகு பெயர். ஆம்பலல்லி : இரு பெயரொட்டு. அல்லி : அரிசியை உணர்த்தியதால் பொருளாகுபெயர். 'குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க் கொடை' (தொல் - மரபு- 19) என்றதனுள், 'கொடை என்றதனால், ஆமான் குழவியுங் கொண்டவாறு உணர்க.
|
|
|
[நச்சினார்க்கினியர் 'ஆமான் குழவியைப் புல்லிய கவரி' என்று கொண்டு கூட்டுவார்.]
|
|
|
இச்செய்யுள் திருத்தக்கமுனிவரின் தலைசிறந்த நல்லிசைப் புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும் பெருமையுடைத்தாதலுணர்க. இக் கருத்தின் அழகினைக் கண்ட கம்பநாடர் தங்காவியத்தே,
|
|