| நாமகள் இலம்பகம் | 
213  | 
  | 
|  374 | 
கோனெறி தழுவி நின்ற |  
|   | 
  குணத்தொடு புணரின் மாதோ |  
|   | 
நானெறி வகையி னின்ற |  
|   | 
  நல்லுயிர்க் கமிர்த மென்றான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து - ஆகமங் கூறிய வழியினால் நன்மை தீமையை ஆராய்ந்து கூறிய பொருளினிடம் நெஞ்சு சென்று ; தீமைப் பால் நெறி பலவும் நீக்கி - தீய பகுதியான வழியெல்லாம் நீக்கி ; பருதி அம் கடவுள் அன்ன கோன் நெறி - ஞாயிறன்ன அருகப் பெருமானது நெறியை; தழுவி நின்ற குணத்தொடு புணரின் - பொருந்தி நின்ற பண்புடன் கூடினால்; நால்நெறி வகையில் நின்ற நல்லுயிர்க்கு அமிர்தம் என்றான் - நால்வகை நெறியிலே அமைந்த நல்ல உயிர்கட்கு ஆக்கம் என்றான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) நிறத்தாலும் இருள் நீக்கத்தாலும் ஞாயிறு உவமை. குணம்: இரத்தினத்திரயம். அவை: நல்ஞானம் , நற்காட்சி, நல்லொழுக்கம். நானெறி: நரகர், விலங்கு, மக்கள், தேவர் ஆகிய உயிர்கள் செல்லும் நெறி. நல்லுயிர்-வீடு பேறு விழையும் உயிர். இதனைப் 'பவ்விய சீவன்' என்பர் வடநூலார். 
 | 
  | 
| 
    நூல்நெறி - இறைவன் ஓதிய ஆகமவழி. இச்செய்யுள், 
 | 
  | 
|   | 
”சென்ற விடத்தாற் செலவிடா தீதொெரீஇ | 
  | 
|   | 
நன்றின்பா லுய்ப்ப தறிவு” (குறள், 422) | 
  | 
| 
    என்னுமருமைத் திருக்குறளை நினைப்பிக்கின்றது. 
 | 
( 345 ) | 
|  375 | 
அறிவினாற் பெரிய நீரா |  
|   | 
  ரருவினை கழிய நின்ற |  
|   | 
நெறியினைக் குறுகி யின்ப |  
|   | 
  நிறைகட லகத்து நின்றார் |  
|   | 
பொறியினும் பெயர வைவாய்ப் |  
|   | 
  பொங்கழ லரவின் கண்ணே |  
|   | 
வெறிபுலங் கன்றி நின்றார் |  
|   | 
  வேதனைக் கடலு ணின்றார். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அறிவினால் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற நெறியினைக் குறுகி - அறிவினால் உயர்ந்த பண்பினர் தீவினை நீங்கி நின்ற நன்னெறியினைக் கூடி; இன்ப நிறை கடல் அகத்து நின்றார் - இன்பம் நிறைந்த கடலிலே நின்றாராவர். பொறி எனும் பெயர ஐவாய்ப் பொங்கு அழல் அரவின் கண்ணே - ஐம்பொறிகள் என்னும் பெயரையுடைய ஐவாயினும் பொங்கும் 
 | 
  |