| நாமகள் இலம்பகம் |
223 |
|
|
(இ - ள்.) கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றி யாங்கு - (இவ்வாறு) கண்ணன் கன்னனுக்கு முற்காலத்திற் பிறப்பினைத் தெளிவித்தாற் போல (ஒரு கதை முகத்தால் உணர்த்தியவுடன்) ; அப் பெரியவன் யாவன் என்ன - சீவகன் 'தங்களாற் கூறப்பட்டவன் யாவன் ? என்று வினவ, (ஆசிரியனும்) ; நீ எனப் பேசலோடும் - நீ யென்று கூறினானாக; சொரி மலர்த் தாரும் பூணும் ஆரமும் குழையச் சோர - தேன் சொரியும் மாலையும் அணிகலனும் முத்துமாலையும் குழைந்து சோர; திருமலர்க்கண்ணி சிந்த - அழகிய மலர்க்கண்ணி சிதற; தெருமந்து மயங்கி வீழ்ந்தான் - உள்ளங் கலங்கி மூர்ச்சித்து வீழ்ந்தான்.
|
|
|
(வி - ம்.) கண்ணி: முடிமாலை. பெரியவன் : அறிவினாற் பெரியவன், சீவகன். பேசலோடும் : ஓடு : உடனிகழ்ச்சி.
|
|
|
'இவ்வாறு' எனவும் 'உணர்த்தியவுடன்' எனவும் வருவிக்க. அன்பு மிகுதியான் மூர்ச்சை முந்திற்று. மூர்ச்சை - கையாறு.
|
|
|
கரியவன் - கண்ணன். அன்று - பண்டைக்காலத்திலே. தேற்றியாங்கு - தேற்ற என ஒருசொல் வருவித்துக்கொள்க. தெருமந்து - சுழன்று.
|
( 360 ) |
| 390 |
கற்பகங் கலங்கி வீழ்ந்த |
| |
வண்ணம்போற் காளை வீழச் |
| |
சொற்பகர் புலவன் வல்லே |
| |
தோன்றலைச் சார்ந்து புல்லி |
| |
நற்பல குழீஇய தம்மா |
| |
னவையறத் தேற்றத் தேறிக் |
| |
கற்புனை திணிதிண் டோளான் |
| |
கவலைநீர்க் கடலுட் பட்டான். |
|
|
(இ - ள்.) கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழ - கற்பகம் நிலைகுலைந்து வீழந்த தன்மை போலச் சீவகன் விழுதலாலே; சொல் பகர் புலவன் வல்லே தோன்றலைச் சார்ந்து புல்லி - 'சொலல் வல்ல' ஆசிரியன் விரைந்து சீவகனைச் சேர்ந்து தழுவி; நல்பல குழீ இய தம்மால் நவை அறத் தேற்ற - சந்தனம் முதலிய கூட்டுப் பொருள்களாற் செய்த குழம்பினாற் சோர்வு நீங்கத் தேற்றியவுடன்; கல்புனை திணிதிண் தோளான் தேறி - கற்றூண் போன்ற அணி செய்யப்பட்ட திண்ணிய தோளினான் தெளிந்து; கவலை நீர்க்கடலுள் பட்டான் - கவலைக் கடலிலே வீழ்ந்தான்.
|
|
|
(வி - ம்.) சீவகன் வண்மையிற் சிறந்தவன் ஆதலின் அவன் நிலை குலைந்து வீழ்ந்ததற்குக் கற்பகத்தை உவமையாகக் காட்டினார்.
|
( 361 ) |