| நாமகள் இலம்பகம் |
225 |
|
|
கணையையும் எடுத்துக்கொண்டு ; கூற்று எனச் சிவந்துதோன்றும் இலையுடைக் கண்ணியானை - கூற்றுவன் போல முகஞ் சிவந்து நின்ற இலை மிடைந்த மலர்க் கண்ணியானை ; இன்னணம் விலக்க கினான் - இவ்வாறு கூறித் தடுத்தான்.
|
|
|
(வி - ம்.) தந்தையைக் கொன்றவனைக் கொல்லாமை விலக்கல் அருமையின் மேற்கூறுகின்ற கூற்றான் விலக்கினமை தோன்ற, 'இன்னணம்' என்றார்.
|
|
|
[நச்சினார்க்கினியர் 'சிங்கமடங்கலிற் சீறி' எனவும் 'திரையின் முழங்கி' எனவும் மாற்றிக் கூட்டுவர்]
|
( 363 ) |
| 393 |
வேண்டுவ னம்பி யானோர் |
| |
விழுப்பொரு ளென்று சொல்ல |
| |
ரவாண்டகைக் குரவிர் கொண்மின் |
| |
யாதுநீர் கருதிற் றென்ன |
| |
யாண்டுநே ரெல்லை யாக |
| |
அவன்றிறத் தழற்சி யின்மை |
| |
வேண்டுவ லென்று சொன்னான் |
| |
வில்வலா னதனை நோ்ந்தான். |
|
|
(இ - ள்.) நம்பி யான் ஓர் விழுப்பொருள் வேண்டுவல் என்று சொல்ல - நம்பியே! யான் ஒரு துன்பந்தரும் பொருளை விரும்புகிறேன் என்று கூற; ஆண் தகைக் குரவிர் ! நீர் கருதிற்று யாது? கொண்மின் என்ன-'பெருந்தகை ஆசிரியரே ! நீவிர் கருதியது யாது? அதனைக் கொள்ளுக' என்று சீவகன் வினவ; அவன் திறந்தது யாண்டு நேர் எல்லை ஆக அழற்சியின்மை வேண்டுவல் - கட்டியங்காரன் குலத்தளவில் ஓர் யாண்டின் அளவாகச் சீற்றமின்மையை விரும்புவேன் ; என்று சொன்னான் - என்று விலக்கிக் கூறினான்; வில்வலான் அதனை நேர்ந்தான் - சீவகன் உடன்படற்கரிய அதனை ஒப்பினான்.
|
|
|
(வி - ம்.) 'என்று கூற ' எனவும் பாடம்.
|
|
|
வேண்டுவல்: அல் ஈற்றுத் தன்மைச் சொல்; சந்தியால் னகரம் வந்தது. இர் ஈறு, 'கேளிர் வாழியோ' (குறுந்- 280) என்றாற் போல இயல்பாய் நின்று விளியேற்றது. ஆண்டகைமை கூறிற்று, கொலையை விலக்குவரோ என்று அஞ்சிக் கற்பித்த முகத்தான் ; இதனால் அரசனென்று ஆசிரியனைச் சீவகன் உணர்ந்தானாயிற்று. திறம் - குலம். வல்லான்: எதிர்மறை யாகாது உலக வழக்காய் உடன்பாடு உணர்த்திற்று. இது மேலும் கொள்க. கொள்+மின்=கொண்மின் என ளகரம் ணகரமாகத் திரிந்தது. இது மின் விகுதி பெற்ற முன்னிலையேவலொருமை வினைமுற்று.
|
( 364 ) |