பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 242 

   (இ - ள்.) கோவலர் குழலும் நவியமும் ஒழிய - (அங்ஙனஞ் சிதறிய) ஆயர் தம்மிடமிருந்த குழலும் கோடரியும் கை நீங்க; காடு கழலப் போய் - காடு நீங்க ஓடி; கன்று தாம்பு அரிந்து உழலை பாய்ந்து உலாம் முன்றில் பள்ளியுள் - கன்றுகள் கயிற்றை அறுத்துக்கொண்டு தடைமரத்தின்மேற் பாய்ந்து உலவும் வாயிலையுடைய இடைச் சேரியில் ; மழலைத் தீஞ்சொலார் மறுக வாய்விட்டார் - மழலைபோல இனிய மொழியினையுடைய ஆய்ச்சியர் மனம் வருந்திச் சூழல வாய்விட்டுக் கதறினர்.

 

   (வி - ம்.) கதறியது மேல் வரும்.

 

   நவியம் - கோடரி. காடு கழலப்போய் என மாறுக. உழலை - தடை மரம். மழலைத் தீஞ்சொலார் என்றது குறிப்பாக ஆய்த்தியரை உணர்த்தியது.

( 14 )
423 மத்தம் புல்லிய கயிற்றின் மற்றவ
ரத்த லைவிடி னித்த லைவிடா
ருய்த்த னரென வுடைத யிர்ப்புளி
மொய்த்த தோணலார் முழுதும் ஈண்டினார்.

   (இ - ள்.) மத்தம் புல்லிய கயிற்றின் அவர் அத்தலைவிடின் இத்தலை விடார் உய்த்தனர் என - மத்தைப் பிணித்திழுக்கும் கயிற்றைப்போல அவ்வேடர் ஒருபக்கத்தை நெகிழவிட்டாராயின் மற்றொரு பக்கத்தை நெகிழவிடாராய் ஆனிரையைக்கொண்டு போயினர் என்று இடையர் வாய்விட்டுக் கதற ; உடை தயிர்ப் புளி முழுதும் மொய்த்த தோள் நலார் ஈண்டினார் - கடையும் போது தயிர்ப்புள்ளி தோள் முழுதும் பதிந்த இடைச்சியர் யாவருங் கூடினர்.

 

   (வி - ம்.) 'உய்த்தனர்' எனத் தெளிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினர்.

 

   மத்தம் - தயிர் கடைமத்து. புளி - புள்ளி: கெடுதல் விகாரம். இதன் கண்ணும் ஆயர் தம்மநுபவத்திற் கண்டதனையே உவமையாக எடுத்தோதுதல் உணர்க. தயிர்ப்புள்ளி தோள்முழுதும் மொய்த்த நல்லார் என மாறுக.

( 15 )
424 வலைப்படு மானென மஞ்ஞை யெனத்தம்
முலைப்படு முத்தொடு மொய்குழல் வேய்ந்த
தலைப்படு தண்மலர் மாலை பிணங்க
வலைத்த வயிற்றின ராயழு திட்டார்.

   (இ - ள்.) வலைப்படும் மான் என மஞ்ஞை என - வேடர் வலைப்பட்ட மான் போலவும் மயில்போலவும்; தம் முலைபடும்