பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 249 

436 வீட்டினார் மைந்தர் தம்மை
  விளிந்தமா கவிழ்ந்த திண்டோ்
பாட்டரும் பகடு வீழ்ந்த
  பனிவரை குனிவ தொத்தே.

   (இ - ள்.) வாள் படை அனுங்க - தம்மைக் கெடுத்த வாட்படை கெடுமாறு; வேடர் வண்சிலை வளைய வாங்கி - வேடர்கள் தம் ஆற்றல்மிகும் சேமவில்லை வளைய வளைத்து; கோள்புலி இனத்தின் மொய்த்தார் - கொலையில் வல்லதான புலியின் இனம் போலச் சூழ்ந்தவர்களாய்; கொதிநுனைப் பகழி தம்மா மைந்தர் தம்மை வீட்டினார் காய்ச்சிய முனையையுடைய அம்புகளால் அரசன் படைஞரை வீழ்த்தினர்; மாவிளிந்த - குதிரைகள் கெட்டன; திண்தேர் கவிழ்ந்த - வலிய தேர்கள் கவிழ்ந்தன; பாடு அரும்பகடு - அரிய வுழைப்பினையுடைய யானைகள்; பனிவரை குனிவது ஒத்து வீழ்ந்த - பனிமலைகள் தாழ்வதுபோல அழிந்தன.

 

   (வி - ம்.) மொய்த்தார் : வினையாலணையும் பெயர். 'பாட்டு' என்பது, 'பட்டு' என்பதன் விகாரம்.

( 28 )
437 வென்றிநாங் கோடு மின்னே
  வெள்ளிடைப் படுத்தென் றெண்ணி
யொன்றியுள் வாங்கு கென்ன
  வொலிகட லுடைந்த தேபோற்
பொன்றவழ் களிறு பாய்மா
  புனைமயிற் குஞ்சி பிச்சம்
மின்றவழ் கொடியொ டிட்டு
  வேற்படை யுடைந்த வன்றே.

   (இ - ள்.) நாம் இன்னே வெள்ளிடைப்படுத்து வென்றி கோடும் என்று எண்ணி - நாம் இப்போதே வேடரை வெளிப் படுத்தி வென்றி கொள்வோம் என்று (அரசன் படையில் மிகுதியானோர்) நினைத்து; ஒன்றி உள் வாங்குக என்று - ஒற்றுமையாக அப்படையுடன் பொருந்தித் தள்ளிச் சிறிது குறைப்பீராக என்று தம் படையை ஊக்க மூட்டியும்; பொன்தவழ் களிறு பாய்மா புனைமயிற் குஞ்சி பிச்சம் மின் வழ் கொடியொடு இட்டு - பொன் அணிந்த களிறும் பாயும் புரவியும் அணிந்த மயிலிற்காலான சிற்றணுக்கன் என்னும் விருதும் பீலிக்குடையும் ஒளி தவழும் கொடியும் ஆகியவற்றை விட்டுவிட்டு; ஒலிகடல் உடைந்ததேபோல் வேற்படை உடைந்த - ஒலிக்குங் கடல் அணை