| கோவிந்தையார் இலம்பகம் |
254 |
|
|
பொருந்தும். இஃது சீவனுடைய உட்கோள். இனி, 'போலா' எனச் செய்யாவென்னும் எச்சவினையாக்கிப் 'போன்று அவன் ஆக' என முடிபு செய்வர் நச்சினார்க்கினியர். 'போலாம்' என்னும் பாடமும் அவருக்கு உடன்பாடே. 'போல்' என்பது உவமையுணர்த்தியது; ஒப்பில் போலி அன்று.
|
( 35 ) |
| 444 |
போர்ப்பண் ணமைத்து நுகம்பூட்டிப் |
| |
புரவி பண்ணித் |
| |
தோ்ப்பண் ணமைத்துச் சிலைகோலிப் |
| |
பகழி யாய்ந்து |
| |
கார்க் கொண்மு மின்னி னிமிர்ந்தான்கலி |
| |
மான்கு ளம்பிற் |
| |
பார்க்கண் ணெழுந்த துகளாற் பகன் |
| |
மாய்ந்த தன்றே. |
|
|
(இ - ள்.) போர்ப்பண் அமைத்து - தன்னைப் போருக்கு ஈடாக்கிக் கெண்டு; புரவி பண்ணி நுகம்பூட்டித் தேர்ப்பண் அமைத்து - குதிரைகளைப் புனைந்து நுகத்திலே பூட்டித் தேரைப் புனைந்து; சிலை கோலிப் பகழி ஆய்ந்து - வில்லை வளைத்துக் கணைகளை ஆராய்ந்து; கார்க் கொண்மு மின்னின் நிமிர்ந்தான் - கரிய முகிலிடையே மின்னெனத் தேரைச் செலுத்தினான்; கலிமான் குளம்பின் பார்ப்பகண் எழுந்த துகளாற் பகல் மாய்ந்தது - முழங்குங் குதிரைகளினுடைய குளம்பினாலெழுந்த புழுதியால் ஞாயிறு மறைந்தது.
|
|
|
(வி - ம்.) கொண்மூ : கொண்மு என ஆனது விகாரம்.
|
|
|
போர் பண்ணமைத்து என்றது, போருக்குத் தகுதியாகத் தன்னை யாக்கிக் கொண்டென்றவாறு. அஃதாவது கழல்கட்டிப் படைக்கலமேந்தி இன்னோரன்ன பிறவும் செய்து கோடல். சிலை - வில். கோலுதல் - அதனை வளைத்துக் காண்டல். கலிமான் - குதிரை. பகல்: ஆகுபெயர்; ஞாயிறு.
|
( 36 ) |
| 445 |
இழுதொன்று வாட்க ணிளையாரிளை |
| |
யார்க ணோக்கிற் |
| |
பழுதின்றி மூழ்கும் பகழித்தொழில் |
| |
வல்ல காளை |
| |
முழுதென்று திண்டோ் முகஞ்செய்தவன் |
| |
றன்னொ டேற்கும் |
| |
பொழுதன்று போது மெனப்புண்மொழிந் |
| |
தான்மொ ழிந்தான். |
|