பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 255 

   (இ - ள்.) இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார் கண் நோக்கின் - நெய் பூசிய வாளனைய கண்ணையுடைய மகளிர் காமுகரிடம் நோக்கும் நோக்கைப்போல; பழுது இன்றி மூழ்கும் பகழித் தொழில் வல்ல காளை - தப்பின்றித் தைக்கும் கணைத்தொழிலில் வல்ல காளையாகிய; முழுது ஒன்று திண்தேர் முகம் செய்தவன் தன்னொடு - எல்லாத் திக்கினும் ஒரு திண்ணிய தேரே எதிர்த்துச் செலுத்தும் வன்மையுடைய இவனொடு; ஏற்கும்பொழுது அன்று, போதும் என - எதிர்க்கும் காலம் இஃதன்று, இப்பொழுது விட்டுப் போவோம் என்று; புள்மொழிந்தான் மொழிந்தான் - முன்னர்ப் புட்குரல் கண்டு மொழிந்த நிமித்திகன் கூறினான்.

 

   (வி - ம்.) ”பின்னரே ஒருவன் தேரினால் உடைதும் சுடுவின் தேனுடைந்த வண்ணமே” என்று கூறிய அந்நிமித்திகனே என்பதுபடப் புண்மொழிந்தான் மொழிந்தான் என்றார். இப்பொழுது இவனோடு யாம் போர்ஏற்பின் சுடுவின்தேன் உடைந்த வண்ணம் உடைதல் திண்ணம் ஆதலால் இப்பொழுது வாளா மீள்வேம் என்பதுகுறிப்பு.

( 37 )
446 மோட்டும் முதுநீர் முதலைக்கு
  வலிய துண்டேல்
காட்டுண் ணமக்கு வலியாரையுங்
  காண்டும் நாமென்
றேட்டைப் பசியி னிரைகவ்விய
  நாக மேபோல்
வேட்டந் நிரையை விடலின்றி
  விரைந்த தன்றே.

   (இ - ள்.) முதுநீர் மோட்டு முதலைக்கு வலியது உண்டேல் - ஆழமான நீரில் பெரிய முதலையினும் வலிமையானது இருக்குமானால்; காட்டுள் நமக்கு வலியாரையும் நாம் காண்டும் என்று - நம் நாட்டில் நம்மினும் வலியாரையும் காண்போம் என்றுகூறி; ஏட்டைப் பசியின் இரை கவ்விய நாகமே போல் - இளைப்பை யுண்டாக்கிய பசியினால் இரையைப் பற்றிய பாம்பு அதனை விடாதவாறு போல; வேடு அந் நிரையை விடல் இன்றி விரைந்தது - வேட்டுவர்குழு தான் பற்றிய ஆவின் திரளை விடாமற் போர்மேல் விரைந்து சென்றது.

 

   (வி - ம்.) மோட்டும் முதுநீர்: மகரம் விரித்தல் விகாரம். வேடு - குழுப்பெயர்; எதுகை நோக்கி வேட்டு என விரிந்தது.

 

   முதுநீர் என்புழி முதுமை ஆழத்தை உணர்த்தியது; என்னை? ஆழ்ந்த நீரே வற்றாமையான் முதுநீராதல்கூடுமாகலின். ”நெடும்புனலுள் முதலை (பிறவற்றை) வெல்லும்” என்பவாகலின். முதலைக்கு வலிய