பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 257 

   (இ - ள்.) செய்கழல் குருசில் திண்தேர் - புனைகழலையுடைய சீவகனின் திண்ணிய தேர்; கைவிசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப - கையினால் விசை கொண்டு விரைந்து வீசும் கொள்ளிக் கட்டையும் காற்றாடியும் போல; திசைகளெல்லாம் ஐயென விசையொடு வளைப்ப - எல்லாத்திக்கினும் விரைய விசையுடன் வளைப்ப; வீரர் ஆர்த்தனர் - சீவகனைச் சேர்ந்த வீரர் ஆரவாரித்தனர்; அவரும் ஆர்த்தார் - வேடர்களும் ஆரவாரித்தனர்; ஐயன் மொய்அமர் நாள் செய்து முதல் விளையாடினான் - சீவகன் (பின்னர் நடத்தும்) நெருங்கிய போருக்கு (இப் போரினால்) நன்னாள் கொண்டு முதலாவதாக விளையாடினான்.

 

   (வி - ம்.) சீவகனுக்கு வேடர் நிகரன்மையானும் பகையன்மையானும் தன் அருளும் வீரமும் மேம்படுதற்குச் சென்றான் ஆகலானும் அவரை அஞ்சப் பண்ணி நிரைமீட்டான் என்ற கருத்தால், 'நாட்செய்து தம்மிற் படைவகுத்து விளையாடினான்' என்றார். மேல் வேடர்களைக் கொல்லாது விடுதலினாலும் இது விளங்கும். கட்டியங்காரனுடன் நிகழ்த்தும் போருக்கு இது 'நாட்கோள்' என்றார். இப்போரினாற் கட்டியங்காரன் பொறாமையுற்றுப் பகைகொண்டானாதலின்.

( 40 )
449 ஆழியா னூர்திப் புள்ளி
  னஞ்சிற கொலியி னாகம்
மாழ்கிப்பை யவிந்த வண்ணம்
  வள்ளறோ் முழக்கி னானுஞ்
சூழ்துகண் மயக்கத் தானும்
   புளி ஞருள் சுருங்கிச் சேக்கைக்
கோழிபோற் குறைந்து நெஞ்சி
  னறமென மறமும் விட்டார்.

   (இ - ள்.) ஆழியான் ஊர்திப் புள்ளின் அம் சிறகு ஒலியின் - திருமால் ஊர்தியாகிய கருடனுடைய அழகிய சிறகுகளின் ஓசையால்; நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் - பாம்பு மயங்கிப் படம் ஒடுங்கினாற்போல; வள்ளல் தேர் முழக்கினானும் சூழ்துகள் மயக்கத்தாலும் - சீவகனுடைய தேர் முழக்கத்தாலும் தம்மைச் சூழ்ந்த புழுதியின் மயக்கத்தாலும்; புளிஞர் உள் சுருங்கி - வேடர்களின் உள்ளம் குறைந்து; சேக்கைக் கோழிபோல் குறைந்து - வலைப்பட்ட கோழிபோலே செயல் குறைந்து; நெஞ்சின் அறம் என மறமும் விட்டார் - தம் நெஞ்சிலே அறம் புகாமற் கைவிட்டாற்போல ஈண்டு வீரத்தையும் கைவிட்டனர்.