| கோவிந்தையார் இலம்பகம் |
258 |
|
|
(வி - ம்.) அவருயிரைக் கொடுத்தலின் 'வள்ளல்' என்றார். பொராமல் தேரொலியாலே அவரை அச்சுறுத்தி நிரை மீட்கின்றான் என்று கொள்க.
|
|
|
ஆழியான் - சக்கரப் படையையுடைய திருமால். புள் - கருடன். புளிஞர் - வேடர். உள் - உள்ளம், ஊக்கம். சிறப்புப் பொருளையே உவமையாகஎடுத்து அவ்வுவமையானும் அவ்வேடர் இயல்புணர்த்துவார், அறம் என மறமும் விட்டார் என்றார். சீவகன் வெல்லுதற்கு அவன்பால் அறமுண்மையும் அவர் தோற்றற்கு அறமின்மையும் காரணம் எனக் குறிப்பாக ஏதுக் கூறியவாறு.
|
( 41 ) |
| 450 |
புள்ளொன்றே சொல்லு மென்றிப் |
| |
புன்றலை வேடன் பொய்த்தான் |
| |
வெள்ளந்தோ் வளைந்த நம்மை |
| |
வென்றியீங் கரிது வெய்தா |
| |
வுள்ளம்போற் போது நாமோ |
| |
ரெடுப்பெடுத் துய்ய வென்னா |
| |
வள்ளன்மே லப்பு மாரி |
| |
யார்ப்பொடு சிதறி னாரே. |
|
|
(இ - ள்.) புள் ஒன்றே சொல்லும் என்று இப் புன்தலை வேடன் பொய்த்தான் - ஆந்தை ஒரு தேரே வரும் என்று சொல்கின்றதென்று நமக்கு இச் சிறு தலையுடைய வேடன் பொய் கூறினான்; நம்மை வெள்ளம் தேர் வளைந்த - நம்மை வெள்ளம்போலத் தேர்கள் வளைந்தன; ஈங்கு வென்றி அரிது - (ஆதலால்) இவ்விடத்தே நமக்கு வெற்றியில்லை; நாம் வெய்தா ஓர் எடுப்பு எடுத்து உள்ளம்போல் உய்யப் போதும் என்னா - நாம் கடிதாக ஒருமுறை உற்றுப் பொருது விலகித் தப்பி ஒருவருள்ளம்போல எல்லோரும் செல்வோம் என்றுரைத்து; வள்ளல் மேல் அப்புமாரி ஆர்ப்பொடு சிதறினார் - சீவகன்மேல் அம்பு மழையை ஆரவாரித்துச் சொரிந்தனர்.
|
|
|
(வி - ம்.) 'உள்ளம்போல' என்பதற்கு, 'நிமித்திகன் உள்ளம்போல்' என்றும் உரைத்துக் கொள்க.
|
|
|
இச்செய்யுளின்கண் ஆற்றாது புறமிட்டோட நினைக்கும் வேடர் ”புள் ஒன்றே சொல்லும் என்று இப் புன் தலை வேடன் சொன்னான்” என்று அக்கிழ நிமித்திகன்பாற் குற்றங் கூறமுற்படுதல் நினைக்குந்தோறும் நம் நகைச்சுவையை மிகுதிப்படுத்துதலுணர்க. நாம் ஓர் எடுப்பெடுத்துப் பார்ப்பேம் என்பதும் அவர்தம் ஆற்றாமையையே காட்டுதலறிக.
|
( 42 ) |
| 451 |
மால்வரைத் தொடுத்து வீழ்ந்த |
| |
மணிநிற மாரி தன்னைக் |
| |
காலிரைத் தெழுந்து பாறக் |
| |
கல்லெனப் புடைத்த தேபோன் |
|