| கோவிந்தையார் இலம்பகம் |
260 |
|
|
(வி - ம்.) சீவகன் அம்பு தொடுக்குஞ் சிறப்பினைக் கண்டு, இனிப் பொருதல் அரிதென்று ஊக்கங் குறைந்து நிரையைக் கைவிடுதலால், 'தொடுத்தலோடும் ஆநிரை பெயர்ந்த' என்றார். ஆநீரை பெயர்ந்த பிறகு தன்னைச் சூழ்ந்து குவிந்த வேடர்திரள் குலைந்து போமாறு எய்தநிலையை 'மாரிபோல்' நின்றதென்றார்.
|
|
|
கொல்லாதிருத்தலின் 'மாரிபோல்' என்றார் என்றும், 'கானவர் இரிய அணிசெய் திண்டோள் முடங்கிற்று' என்று கொண்டு கூட்டியும் நச்சினார்க்கினியர் கூறுவர்.
|
( 44 ) |
வேறு
|
|
| 453 |
ஐந்நூறு நூறு தலையிட்ட வாறா யிரவர் |
| |
மெய்ந்நூறு நூறு நுதிவெங்கணை தூவி வேடர் |
| |
கைந்நூறு வில்லுங் கணையும்மறுத் தான்க ணத்தின் |
| |
மைந்நூறு வேற்கண் மடவார்மனம் போல மாய்ந்தார். |
|
|
(இ - ள்.) ஐந்நூறு நூறு தலையிட்ட ஆராயிரவர் - ஐயாயிரத்தைத் தலையிலேயிட்ட ஆறாயிரவர்களின், மெய்நூறு நூறு நுதி வெங்கணை தூவி - உடம்பைத் துகளாக ஆக்கவல்ல முனையையுடைய கொடிய கணைளைச் சொரிந்து; வேடர் கைநூறு வில்லும்கணையும் அறுத்தான் - வேடரின் கையிலுள்ள நூற்றுக் கணக்கான விற்களையும் அம்புகளையும் வெட்டினான்; மைநூறு வேல்கண் மடவார் மனம்போலக் கணத்தின் மாய்ந்தார் - அஞ்சனம் தீட்டிய வேலனைய கண்களையுடைய பொது மகளிரின் மனம் போல நிலையின்றி ஒரு நொடியிலே ஓடி மறைந்தனர்.
|
|
|
(வி - ம்.) ஐம்பத்தாறாயிரவர் என்றபடி; இவர்கள் வேடர்கள். மெய்யை நூறவல்ல கணையாயினும் அம்பையும் வில்லையுமே நூறுமாறு வெங்கணை தூவினான். இஃது அவனுடைய அருளுள்ளத்தைக் காட்டுகிறது. மையாகிய நூறு - அஞ்சனம். பொது மகளிரின் மனம் நிலையற்ற தாகையால் உவமையாயிற்று.
|
( 45 ) |
| 454 |
வாள்வாயு மின்றி வடிவெங்கணை |
| |
வாயு மின்றிக் |
| |
கோள்வாய் மதிய நெடியான்விடுத் |
| |
தாங்கு மைந்தன் |
| |
றோள்வாய் சிலையின் னொலியாற்றொறு |
| |
மீட்டு மீள்வா |
| |
னாள்வாய் நிறைந்த நகைவெண்மதி |
| |
செல்வ தொத்தான். |
|
|
(இ - ள்.) கோள்வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு - இராகு என்னும் கோளின் வாயிலிருந்து திங்களைத் திருமால் விடுவித்தாற் போல; வாள் வாயும் இன்றி வடிவெங்கணை வாயும்
|
|