| கோவிந்தையார் இலம்பகம் | 
261  | 
  | 
| 
 இன்றி-வாள் வாய் வடுவும் கூரிய கொடிய அம்பின்வாய் வடுவும் உண்டுபண்ணாமலே; தோள்வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான் மைந்தன் - தோளில் ஏந்திய வில்லின் ஒலியினாலேயே ஆனிரையைத் திருப்பித் திரும்பும் வலிமையுடைய சீவகன்; நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வதொத்தான் - நாள்தொறும் நிறைவெய்திய கலை (ஒளி)யையுடைய முழுமதி செல்வது போன்றான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) வேடர்கட்குத் தீங்கின்றியே மீட்டான் என்பதனைக் கருதியே, 'சிலையின் ஒலியால்' என்றார். நாள்தோறும் நிறைந்த மதி உலகறியக் கலை நிரம்பினமை தோற்றுவித்தலின் உவமையாயிற்று. ['காந்தருவ தத்தையின் யாழ்வென்றியின்போது அரசர் தெளிவிக்கவும் தெளியாமற் பொருது பட்டனரேனும் அவர்கள் பகைவரன்மையிற் சிறிது பாவமுளதென்று கருதிப் பொன்னால் அருகன் உருச்செய்து விழாச் செய்து போர்க்களத்தே பாவம் போக்கினான். ஈண்டு எம்முறையானுங் கொல்லத்தகாதவ ராதலிற் கொலையின்றென்பது தோன்றக் களத்துப் பாவம் போக்கினானென்று கூறாராயினர் என்க' என்று நச்சினார்க்கினியர் கூறுவர்.] 
 | 
  | 
| 
    நெடியான் - திருமால். கோள் - இராகு. இராகு என்னும் பாம்பின் வாய்ப்பட்டதிங்களைத் திருமால் மீட்டனர் என்பது அருக சமயத்தினர் கூறும் கதை. நகை - ஒளி. 
 | 
( 46 ) | 
|  455 | 
ஆளற்ற மின்றி யலர்தாரவன் றோழ ரோடுங் |  
|   | 
கோளுற்ற கோவ னிரைமீட்டன னென்று கூற |  
|   | 
வாளுற்ற புண்ணுள் வடிவேலெறிந் திற்ற தேபோ |  
|   | 
னாளுற் றுலந்தான் வெகுண்டானக ரார்த்த தன்றே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆள் அற்றம் இன்றிக் கோள் உற்ற கோவன் நிரை அலர்தாரவன் தோழரோடும் மீட்டனன் என்று கூற - இரு படையினும் ஓராளுக்குங் குற்றம் இல்லாமல், வேடராற் கொள்ளப்பட்ட மன்னவனின் ஆனிரையைச் சீவகன் தன் தோழருடனே சென்று மீட்டான் என்று கூற ; நாள் உற்று உலந்தான் - (அதனைக் கேட்ட) தன் ஆயுள் முடியும் நிலையினனான கட்டியங்காரன்; வாள் உற்ற புண்ணுள் வடிவேல் எறிந்து இற்றதேபோல் - வாளால் நேர்ந்த புண்ணிலே வடிவேல் பட்டு அது முரிந்து நின்றாற்போல (வருந்தி); வெகுண்டான் - சீறினான்; நகர் ஆர்த்தது - நகரமோ மகிழ்ந்து ஆரவாரித்தது. 
 | 
  | 
| 
    (வி - ம்.) தோழர்க்குப் போரின்றேனும் உடன் சென்றதால், 'தோழரோடும்' என்றார். கோவன்: நந்தகோன் எனினுமாம். தன் படைதோற்றதன்மேல் இவன் வெற்றி நிலைநின்றதனாற் புண்ணிலே வேலெறியுண்டு முரிந்து நின்றாற் போன்றது. நிரை மீட்டதற்கு உவப்புற வேண்டியவன் வெகுண்டதனால், 'நாளுற்றுலந்தான்' என்று ஒரு பெயரிட்டார் தேவர். இனி, அரசுரிமையைச் சீவகன் எய்தும் நான் வந்துறுதலின் அவ்வாறு கூறினாரெனினும் ஆம். 
 | 
  |