| கோவிந்தையார் இலம்பகம் |
263 |
|
| 457 |
மின்னிவர் நுசுப்பு நோவ |
| |
விடலையைக் காண வோடி |
| |
யன்னமு மயிலும் போல |
| |
வணிநகர் வீதி கொண்டார். |
|
|
(இ - ள்.) இன் அமுது அனைய செவ்வாய் - இனிய அமுது போன்ற செவ்வாயினையும்; இளங் கிளி மழலை அஞ்சொல் - இளங்கிளியின் மொழி போன்ற மழலை பொருந்திய அழகிய மொழியினையும் உடைய; பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் - பொன்னென விளங்கும் தேமல் பொருந்திய பூரிக்கும் இளமுலை மகளிர;் தம் மின் இவர் நுசுப்பு நோவ - தம் மின்னனைய இடை வருந்த; தம் மின் இவர் நுசுப்பு நோவ - தம் மின்னனைய இடை வருந்த; விடலையைக் காண ஓடி - சீவகனைக் காண ஓடிவந்து; அன்னமும் மயிலும் போல அணிநகர் வீதி கொண்டார் - அன்னமெனவும் மயிலெனவும் அழகிய நகரின் தெருக்களை முற்றுகையிட்டனர்.
|
|
|
(வி - ம்.) விடலை : பதினாறுக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதினன். இது கற்புடை மகளிரல்லாதாரை கூறிற்று.
|
( 49 ) |
| 458 |
சில்லரிச் சிலம்பின் வள்வார்ச் |
| |
சிறுபறை கறங்கச் செம்பொ |
| |
னல்குற்றே ரணிந்து கொம்மை |
| |
முலையெனும் புரவி பூட்டி |
| |
நல்லெழி னெடுங்கண் ணம்பாப் |
| |
புருவலில் லுருவக் கோலிச் |
| |
செல்வப்போர்க் காமன் சேனை |
| |
செம்மன்மே லெழுந்த தன்றே. |
|
|
(இ - ள்.) செல்வப் போர்க் காமன் சேனை - செல்வத்தே நின்று போர் செய்யும் காமன் படை; சில் அரிச் சிலம்பின் வள் வார்ச் சிறுபறை கறங்க - சிலவாகிய அரிகளையுடைய சிலம்புகளாகிய சிறிய வாரால் இறுக்கிய சிறுபறை முழங்க; செம்பொன் அல்குல் தேர் அணிந்து - மேகலையால் அல்குலாகிய தேரைப் புனைந்து; கொம்மை முலையெனும் புரவி பூட்டி - பருத்த முலைகளாகிய குதிரைகளைப் பூட்டி; நல் எழில் நெடுங்கண் அம்புஆ - பேரழகினையுடைய நெடுங்கண்களை அம்பாகக் கொண்டு ;புருவவில் உருவக் கோலி - புருவமாகிய வில்லை முற்றும் வளைத்து; செம்மல்மேல் எழுந்தது - சீவகன்மேல் போருக்குப் புறப்பட்டது.
|
|
|
(வி - ம்.) [சிலம்பின் : இன்-அசை. 'முலையெனும் புரவி' என்றார். புரவியின் பின் தேர் செல்லுமாறு போல முலைசென்று கவர்ந்த பின்னர்
|
|