| கோவிந்தையார் இலம்பகம் |
271 |
|
|
யுடைய புலி போன்ற சீவகன்; கொழுநிதிப் புரிசை புக்கான் - வளமிகு செல்வமுடைய தன் மனையக மதிலுக்குள்ளே புகுந்தான்.
|
|
|
(வி - ம்.) கோட்டுதல் - வளைத்தல். தோன்றல் - சீவகன். மகளிர்க்குரிய நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் நான்கனுள் முன்னிற்பதாகலின் நாண்முதற் பாசம். புரிசை : தன் மனைமதில்.
|
( 62 ) |
| 471 |
பொன்னுகம் புரவி பூட்டு |
| |
விட்டுடன் பந்தி புக்க |
| |
மன்னுக வென்றி யென்று |
| |
மணிவள்ள நிறைய வாக்கி |
| |
யின்மதுப் பலியும் பூவுஞ் |
| |
சாந்தமும் விளக்கு மேந்தி |
| |
மின்னுகு செம்பொற் கொட்டில் |
| |
விளங்குதோ் புக்க தன்றே. |
|
|
(இ - ள்.) புரவி பொன் நுகம் பூட்டு விட்டு உடன் பந்தி புக்க - குதிரைகள் பொன் நுகத்திலிருந்து பூட்டு நீங்கி உடனே தம் பந்தியிலே புகுந்தன; மணி வள்ளம் நிறைய இன்மதுவாக்கி - மாணிக்கக் கிண்ணம் நிறைய இனிய மதுவை வார்த்து; பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் - அம் மதுவாகிய பலி முதலியவற்றை; வென்றி மன்னுக என்று ஏந்தி - வென்றி நிலை பெறுக என்று ஏந்த; விளங்குதேர் மின் உகு செம்பொன் கொட்டில் புக்கது - ஒளிவிடும் தேர் விளக்கமான செம்பொன் கொட்டிலிலே புகுந்தது.
|
|
|
(வி - ம்.) விளக்குமேந்தி என்புழி செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.
|
( 63 ) |
| 472 |
இட்டவுத் தரிய மெல்லென் |
| |
றிடைசுவல் வருத்த வொல்கி |
| |
யட்டமங் கலமு மேந்தி |
| |
யாயிரத் தெண்ம ரீண்டிப் |
| |
பட்டமுங் குழையு மின்னப் |
| |
பல்கல னொலிப்பச் சூழ்ந்து |
| |
மட்டவிழ் கோதை மாதர் |
| |
மைந்தனைக் கொண்டு புக்கார். |
|
|
(இ - ள்.) மட்டு அவிழ் கோதை மாதர் ஆயிரத்தெண்மர் ஈண்டி - தேன் விரியும் மாலையணிந்த மங்கையர் ஆயிரத்தெண்மர்
|
|