| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
293  | 
  | 
|  500 | 
வானமுற நீண்டபுகழ் மாரிமழை வள்ள |  
|   | 
றானமென வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி |  
|   | 
நானமிக நாறுகமழ் குஞ்சியவ னேறி |  
|   | 
யூனமெனு மின்றியினி தோடுகவி தென்றான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வானம் உற நீண்ட புகழ் மாரி மழை வள்ளல்-வானுலகினும் பொருந்தப் பரவிய புகழையும் மாரிக்கால மழையனைய வண்மையையும் உடையவனாகிய; நானம் மிக நாறுகமழ் குஞ்சியவன் - புழுகு சாலவும் மணக்கும் சிகையினையுடைய சீதத்தன்; தானம் என வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி ஏறி - தானம் என்ற பெயருடன் விரும்பினோர் விரும்பிய பொருள்களை அளித்துக் கலத்தில் ஏறி; ஊனம் எனும் இன்றி இது இனிது ஓடுக என்றான் - குறை சிறிதும் இல்லாமல் இக்கலம் இனிமையாகச் செல்க என்று வாழ்த்தினான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) கமழ்குஞ்சி என்பதற்கு இயல்பான மணங்கமழுங் குஞ்சி என்பர் நச்சினார்க்கினியர். ' இக்கலம் ஊனம் எனும் இன்றி ஓடுக' எனவே முன்னர்ப் பல கலங்கள் தீங்குற்றன என்பது பெற்றாம். 
 | 
  | 
| 
    ”அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப் படுஞ்சொல்” (நாலடி. 100) என்ப வாகலின் வானமுற நீண்டபுகழ் என்றார். யாத்திராதானம் என்னும் ஒரு பெயரையிட்டு வரையாது வேண்டுவன வேண்டுநர்க்கு நல்கினான் என்பார், 'தானம் என' என்றார். தானம் சிறந்தோரைத் தேர்ந்து வழங்குவதாகலின் இங்ஙனம் கூறினார். 
 | 
( 8 ) | 
|  501 | 
ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன் |  
|   | 
றீடுபடச் செய்திளைய ரேத்தவிமிழ் முந்நீர்க் |  
|   | 
கோடுபறை யார்ப்பக்கொழுந் தாட்பவழங் கொல்லா |  
|   | 
வோடுகளி றொப்பவினி தோடியதை யன்றே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆடு கொடி உச்சி அணி கூம்பின் - ஆடும் கொடிகளை உச்சியில் அணிந்த கூம்பிலே; உயர் பாய் மூன்று ஈடுபடச் செய்து - உயர்ந்த பாய்கள் மூன்றைக் காற்று முகக்குமாறு குழையக் கட்டியதனால்; இளையர் ஏத்த - தொழில் புரிவோர் புகழ; இமிழ் முந்நீர்க் கோடு பறை ஆர்ப்ப - ஒலிக்குங் கடலிலே பிறந்த சங்கும் பறையும் முழங்கா நிற்ப; கொழுந்தாள் பவழம் கொல்லா - வளமிகும் பவளங்களின் கொடிகளை அறுத்துக் கொண்டு; ஓடு களிறு ஒப்ப - ஓடுங் களிறுபோல; இனிது ஓடியது - நன்றாக ஓடியது. 
 | 
  | 
| 
    (வி - ம்.) ஓடியதை : ஐ : சாரியை. அன்று ஏ : அசைகள். 
 | 
  | 
| 
    ஆடுகொடி : வினைத்தொகை. கூம்பு - பாய்மரம். இளையோர் என்றது தொழிலாளரை. இதனால் மரக்கலங்களில் இசைக்கருவிகள் 
 | 
  |