காந்தருவ தத்தையார் இலம்பகம் |
311 |
|
(இ - ள்.) உருளிமா மதி ஓட்டு ஒழித்து ஓங்கிய வெருளி மாடங்கள்மேல் துயில் எய்தலின் - ஞாயிற்றின் தேரிற் பூண்ட குதிரைகள் திங்களின் செலவைத் தடுத்து உயர்ந்த வெருட்சியையுடைய மாடங்களின் மேல் தூங்குதலினாலே; மருளி மான்பிணை நோக்கின் நல்லார் முகத்து அருளினால் - மருண்ட மான்பிணையின் பார்வையையுடைய மங்கையரின் முகத்தில் தோன்றிய அருளினால்; அழல் ஆற்றுவ போன்ற - தம் வெம்மையைத் தணித்துக்கொள்வன போன்றன.
|
|
(வி - ம்.) உருளி, மருளி, வெருளி : இ : பகுதிப் பொருள் விகுதிகள். உருள் மா : ஒற்றையாழித் தேரை இழுக்கும் குதிரைகள். உருள் - ஆழி : தேரை யுணர்த்தலின் சினையாகு பெயர். திங்கள் மண்டலத்தைக் கடந்து ஞாயிற்றின் மண்டலம் வரை மாடங்கள் உயர்ந்தன என்று கூறினார். மிகை உயர்வு நவிற்சியணி. திங்கள் மண்டலம் ஞாயிற்று மண்டலத்திற்குக் கீழேயுள தென்பது சோதிட நூலார் கொள்கையாம்.
|
( 40 ) |
533 |
அசும்பு பொன்வரை யாய்மணிப் பூண்களும் |
|
பசும்பொன் மாலையும் பட்டுழிப் பட்டவை |
|
நயந்து கொள்பவ ரின்மையி னன்னகர் |
|
விசும்பு பூத்தது போன்றன வீதியே. |
|
(இ - ள்.) பொன் அசும்பு வரை ஆய்மணிப் பூண்களும் - பொன் இடையறாது ஒழுகும் மலைகளிலுண்டான ஆராய்ந்த மணியாற் செய்த அணிகலன்களும்; பசும்பொன் மாலையும் - புதிய பொன் மாலையும்; பட்டுழிப் பட்டவை நயந்து கொள்பவர் இன்மையின் - விழுந்த இடத்தே கிடக்கின்றவற்றை விரும்பி எடுப்பாரின்மையின்; நன்நகர் வீதி விசும்பு பூத்தது போன்றன - அந்த நன்னகரின் தெருக்கள் வானம் மீன்களைப் பூத்த தன்மையை ஒத்தன.
|
|
(வி - ம்.) நயந்து கொள்பவர் இன்மையின் என்றது அந்நகரத்தில் நல்குரவாளர் இல்லை என்றதற்குக் குறிப்பேதுவாய் நின்றது.
|
( 41 ) |
534 |
தேக்க ணின்னகிற் றேனொடு கூட்டமைத் |
|
தாக்கப் பட்ட வளவில் கொழும்புகை |
|
வீக்கி மாடந் திறந்திட மெல்லவே |
|
வூக்கி வாய்விட் டுயிர்ப்பன போன்றவே. |
|
(இ - ள்.) தேம் கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து - நெய்யைத் தன்னிடத்தே உடைய மணமினிய அகிலையும் மற்றைய கூட்டுக்களையும் தேனொடு கலந்திட்டு; ஆக்கப்பட்ட அளவு இல் கொழும் புகை - உண்டாக்கப்பட்ட
|
|