| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
329 |
|
| 561 |
பாம்புபைத் தனைய வல்குற் |
| |
பல்கலை மிழற்ற வேகி |
| |
யாம்பனா றமுதச் செவ்வா |
| |
யரசனைத் தொழுது நின்றாள். |
|
|
(இ - ள்.) பொன் செய்த காம்பு பிச்சம் - பொன்னாற் செய்த காம்பையுடைய பிச்சத்தையும்; கதிர்மணிக் குடையொடு ஏந்தி - ஒளிரும் மணியிழைத்த குடையையும் ஏந்தி; பலர் கவரி வீச - பல மகளிர் கவரி வீச; கிண்கிணி ததும்ப - கிண்கிணி ஒலிக்க; நாகப் பாம்பு பைத்த அனைய அல்குல் பல்கலை மிழற்ற - நாகப் பாம்பு படம் விரித்தாற்போன்ற அல்குலின் மேற் பல்மணிகளையுடைய மேகலை ஒலிக்க; ஆம்பல் நாறு அமுதச் செவ்வாய் ஏகி - ஆம்பல்போல மணக்கும் அமுத மனைய செவ்வாயினையுடையாள் சென்று; அரசனைத் தொழுது நின்றாள் - அரசனை வணங்கி நின்றாள்.
|
|
|
(வி - ம்.) 'பல மகளிர் பிச்சத்தையும் குடையையும் ஏந்திக் கவரியையும் வீசிவர' என்க. நாறுதல் - தோற்றுதலுமாம்
|
|
|
பிச்சம் - பீலிக்குடை. பைத்தல் - படம் விரித்தல். ஆம்பல் நாறு அமுதச் செவ்வாய் என்னும் பன்மொழித்தொடர் காந்தருவதத்தை என்னும் பொருட்டாய் நின்றது. அரசன் - கலுழவேகன்.
|
( 69 ) |
| 562 |
அடிக்கல மரற்ற வேகி |
| |
யரும்பெறற் றாதை பாத |
| |
முடிக்கலஞ் சொரியச் சென்னி |
| |
யிறைஞ்சலு முரிந்து மின்னுக் |
| |
கொடிப்பல நுடங்கி யாங்குத் |
| |
தோழியர் குழாத்து ணிற்ப |
| |
வடுத்தனன் புல்லி வேந்தன் |
| |
னாற்றுகி லாது சொன்னான். |
|
|
(இ - ள்.) அடிக்கலம் அரற்ற ஏகி - அடியில் அணிந்த சிலம்பும் கிண்கிணியும் ஒலிப்பச் சென்று; அரும்பெறல் தாதை பாதம் முடிக்கலம் சென்னி சொரிய முரிந்து இறைஞ்சலும் - அருமையாகக் கிடைத்த தந்தையின் அடிகளை முடியில் அணிந்த கலன்கள் சிந்தத் தலையால் குனிந்து வணங்கி; மின்னுக் கொடிப் பல நுடங்கி ஆங்குத் தோழியர் குழாத்துள் நிற்ப - மின்னற் கொடிகள் பல அசைவனபோன்று நின்ற தோழியர் குழுவிலே நிற்ப; வேந்தன் அடுத்தனன் புல்லி ஆற்றுகிலாது சொன்னான் - மன்னன் அவளை நெருங்கித் தழுவிப் பிரிதலாற்றாமல் இதனைக் கூறினான்.
|
|