| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
343  | 
  | 
| 
    (இ - ள்.) பொன் நிலத்து எருத்தில் பொன்செய் குடம் கோத்த அனைய பொன் தூண் வீறுபெற நாட்டி - அப் பொன்னிலத்திலே தம் கழுத்தில் குடதாடியாலே பொற்குடத்தைக் கோத்தால் ஒத்த பொன் தூணைப் பெருமை பெற நாட்டி; மேல் மண்பவளம் நவின்று - மேலே பெருமை பொருந்திய பவளமாகிய உத்தரம் முதலியன பயில; பளிக்கு அலகு பரப்பி - அவற்றின் மேலே பளிக்குக் கையலகாலே கைபரப்பி; நன்செய் வெளி வேய்ந்து - நன்றாகச் செய்யப்பட்ட வெள்ளியாலே வேய்ந்து; தமனியத்தின் சுவர் அமைத்தார் - பொன்னாலே சுவரை அமைத்தனர். 
 | 
  | 
| 
    (வி - ம்.) மன் - பெருமை. நவின்று - நவில : எச்சத்திரிபு. வெளி : வெள்ளி என்பதன் விகாரம். குடதாடி தூணுக்கும் உத்தரத்துக்கும் நடுவே அமைக்கப்பட்டது. 
 | 
( 101 ) | 
|  594 | 
பாவையவ ளிருக்குமிடம் பளிக்குச்சுவ ரியற்றிக் |  
|   | 
கோவைகுளிர் முத்தினியல் கோதையொடு கொழும்பன் |  
|   | 
மாலையொடு மாலைதலை மணந்துவர நாற்றி |  
|   | 
ஆலையமி தோவியர்கட் கென்னவணி யமைத்தார். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பாவை அவள் இருக்கும் இடம் பளிக்குச் சுவர் இயற்றி - பாவையாகிய அவள் இருக்கும் இடத்தைப் பளிங்கினாலே சுவர் செய்து; குளிர்முத்தின் இயல்கோவை கோதையொடு - குளிர்ந்த முத்தினாலே இயன்ற மாலையும் பூமாலையும்; கொழும் பொன் மாலையொடு மாலை - வளமுறு பொன்மாலையும் மாணிக்க மாலை முதலியனவும்; தலை மணந்து வர நாற்றி - தம்மில் தலையொத்துவரத் தூக்கி; இது ஓவியர்கட்கு ஆலயம் என்ன - இவ்விடம் ஓவியர்களுக்குக் கோயில் என்னுமாறு; அணி அமைத்தார் - ஓவியர் தீட்டினர். 
 | 
  | 
| 
    (வி - ம்.) முத்துமாலை முதலியன - ஓவியங்கட்கு மாலை. 'ஓவியங்கட்கு' எனவும் பாடம். 
 | 
( 102 ) | 
|  595 | 
ஆயிதழ பொன்னலங்கல் காலசைப்ப வொல்கி |  
|   | 
வாயருகு வந்தொசிந்து மறியமழை மின்போற் |  
|   | 
சேயவர்க்குந் தோன்றியதோர் திலகமெனுந் தகைத்தாய்ப் |  
|   | 
பாயதிரை முத்தமணல் பரந்துபயின் றுளதே | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆய் இதழ பொன் அலங்கல் கால் அசைப்ப ஒல்கி - அழகிய இதழையுடைய பொன் தூக்கு மாலைகள் காற்று அசைத்தலாலே ஒதுங்கி; வாய் அருகு வந்து ஒசிந்து மறிய - விளிம்பின் பக்கலில் வந்து சாய்ந்து மீளுதலாலே; மழை மின் போல் சேயவர்க்கும் தோன்றியது ஓர் திலகம் எனும் தகைத்தாய் 
 | 
  |